லக்சயா சென் 4வது இடம்: பாட்மின்டனில் நழுவியது வெண்கலம்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டன் ஒற்றையரில் 4வது இடம் பிடித்த லக்சயா சென் வெண்கலப் பதக்கத்தை கோட்டைவிட்டார்.

பிரான்சில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் உலகின் 'நம்பர்-22' இந்தியாவின் லக்சயா சென், உலகின் 'நம்பர்-7' மலேசியாவின் லீ ஜீ ஜியா மோதினர். முதல் செட்டை 21-13 எனக் கைப்பற்றினார் லக்சயா. இரண்டாவது செட்டின் துவக்கத்தில் முன்னிலை வகித்த இவர், பின் ஏமாற்றியதால் 16-21 என இழந்தார். வெற்றியாளரை முழங்கால் காயத்துக்கு முதலுதவி எடுத்துக் கொண்ட இவர், வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 11-21 எனக் கோட்டைவிட்டார்.
முடிவில் லக்சயா சென் 21-13, 16-21, 11-21 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெண்கலம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார். இதன்மூலம் 12 ஆண்டுகளுக்கு பின், ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை. கடந்த மூன்று ஒலிம்பிக்கில் (செய்னா 2012ல் வெண்கலம், சிந்து 2016ல் வெள்ளி, 2020ல் வெண்கலம்) பாட்மின்டனில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்திருந்தது.

Advertisement