கிடைக்குமா பளுதுாக்குதல் பதக்கம் * மீராபாய் சானு மீது எதிர்பார்ப்பு

பாரிஸ்: பளுதுாக்குதல் போட்டியில் இன்று மீராபாய் சானு, மீண்டும் பதக்கம் வெல்ல காத்திருக்கிறார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று பளுதுாக்குதல் போட்டி துவங்குகின்றன. இதில் 49 பிரிவில் பங்கேற்கிறார் இந்தியாவின் மீராபாய் சானு 29. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், 202 கிலோ துாக்கி, வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இதன் பின் பங்கேற்ற 2022 காமன்வெல்த் விளையாட்டில் 201 கிலோ எடை துாக்கினார்.
இதே அளவு திறமையை பாரிசில் இன்று வெளிப்படுத்தினால், குறைந்தபட்சம் மீராபாய் சானுக்கு வெள்ளி அல்லது வெண்கலம் கிடைக்கும். ஏனெனில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் ஹோவ் ஜிஹுய் இவருக்கு சவால் தரவுள்ளார்.
இருப்பினும் மீராபாய் சானு, சமீப காலமாக காயத்தில் அவதிப்படுவதாக செய்தி வெளியாகின. இதுகுறித்து மீராபாய் சானு பயிற்சியாளர் விஜய் சர்மா கூறுகையில்,'' காயத்தில் இருந்து முழுமையாக மீண்டுள்ளார் மீராபாய் சானு. வழக்கமாக 200 கிலோவுக்கு மேல் துாக்கும் இவர், இம்முறை 205 முதல் 206 கிலோ எடை துாக்க முயற்சிப்பார். இதற்காக நாங்கள் ஏற்கனவே தயாராகி உள்ளோம்,'' என்றார்.
இன்று சிறப்பாக செயல்பட்டு பதக்கம் கைப்பற்றினால், நாளை 30 வது பிறந்த நாள் கொண்டாடும் மீராபாய் சானுவுக்கு சிறந்த பரிசாக அமையும்.

Advertisement