வக்பு வாரிய சட்டத்திருத்தம்; அ.தி.மு.க., எதிர்க்கும் என்கிறார் இ.பி.எஸ்.,

4

சென்னை: மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை அ.தி.மு.க., கடுமையாக எதிர்க்கிறது என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.


வக்பு வாரியச் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. விவாதத்தின் மீது மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்பி பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.


இதனையடுத்து வக்பு சட்டத்திருத்த மசோதா பார்லி., கூட்டுக்குழுவுக்கு 1.25 கோடி கருத்துகள் வந்துள்ளன. இது குறித்து, இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வக்பு சட்டத்தில் உள்ள சாதக, பாதகம் பற்றி இஸ்லாமியர்கள் தான் முழுமையாக உணர்ந்து சொல்ல முடியும். பார்லிமென்ட் கூட்டுக்குழு கருத்துக் கேட்புக்கு ஒரு சில இஸ்லாமிய அமைப்புகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


வக்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டத்திற்கு இஸ்லாமிய அமைப்புகளை அழைக்காதது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை அ.தி.மு.க., கடுமையாக எதிர்க்கிறது. இஸ்லாமிய மக்களின் அடிப்படை உரிமையையே தகர்த்து எறியும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

Advertisement