கும்பமேளாவுக்கு 992 சிறப்பு ரயில்கள்: ரயில்வே அமைச்சகம் ஏற்பாடு


புதுடில்லி: ரயில்வே அமைச்சகம், அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள கும்பமேளாவுக்கு 992 சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்து வருகிறது.


இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
வரும் 2025 ஜனவரியில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா திருவிழா நடைபெற உள்ளது. ஹிந்துக்களின் மிக முக்கிய திருவிழாவாக திகழும் கும்பமேளாவில் பங்கேற்க, அனைத்து மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து கூடுவார்கள்.

பயணிகள் வசதிகளுக்காக, 992 சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரூ.933 கோடி, ஒதுக்க முன் வந்துள்ளோம். பிரயாக்ராஜில், ரயில்வே டிராக்குகள் அமைப்பதற்கு ரூ.3,700 கோடி ஒதுக்கப்படுகிறது. இதனால், பிரக்யாராஜின் துணை பகுதிகளுக்கு விரைவாக, எளிதாகவும் செல்ல முடியும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement