ட்ரீட்மெண்ட் ஓவர்! டிஸ்சார்ஜ் ஆனார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன்

மொகாலி: உடல்நிலை கோளாறு காரணமாக மொகாலியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் வீடு திரும்பினார்.



50 வயது நிரம்பிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மன் உடல்நிலை பாதிப்பு காரணமாக மொகாலியில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில அண்மையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருப்பதாக சிரோமணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா கூறி இருந்தார்.

ஆனால் அவர் லெப்டோஸ்பைரோசிஸ் என்ற பாக்டீரிய தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. மருத்துவமனைக்கு சென்ற பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பல் சிங், சபாநாயகர் குல்தர் சிங், அமைச்சர் ஹர்ஜோத் சிங், காங்கிரஸ் எம்.எல்.ஏ., பர்ஹத் சிங் ஆகியோர் முதல்வர் பகவந்த் மனை சந்தித்து நலன் விசாரித்தனர்.

இந் நிலையில் உரிய சிகிச்சை முடிந்து பகவந்த் மன், இன்று(செப்.29) வீடு திரும்பி உள்ளார். மேலும், நெல் கொள்முதல் ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்வதற்கான கூட்டத்தையும் அவர் அறிவித்துள்ளார். இந்த கூட்டம் அவரின் இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement