கேரளா-வடகிழக்கு 'டிரா': ஐ.எஸ்.எல்., கால்பந்தில் 'விறுவிறு'

கவுகாத்தி: கேரளா, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டி 1-1 என 'டிரா' ஆனது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. அசாமின் கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட், கேரளா அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் 58 வது நிமிடத்தில் எழுச்சி கண்ட வடகிழக்கு யுனைடெட் அணிக்கு அலாதீன் அஜாரை ஒரு கோல் அடித்தார். இதற்கு, 67வது நிமிடத்தில் கேரளா அணியின் நோவா சதாவ்ய் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.
கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. மூன்று போட்டியில் ஒரு வெற்றி, ஒரு 'டிரா', ஒரு தோல்வி என இரு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன.

Advertisement