இந்திய பெண்கள் அணி வெற்றி: 'உலக' பயிற்சியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது

துபாய்: உலக கோப்பை ('டி-20') பயிற்சி போட்டியில் இந்திய பெண்கள் அணி 20 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

ஐக்கிய அரபு எமிரேட்சில், பெண்களுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் வரும் அக். 3-20ல் நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை அணிகளுடன் இடம் பிடித்துள்ளது.

இதற்கு தயாராகும் விதமாக பயிற்சி போட்டி நடக்கிறது. துபாயில் நடந்த பயிற்சி போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு ஜெமிமா ரோட்ரிக்ஸ் (52), யாஸ்திகா (24) கைகொடுத்தனர். இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 141 ரன் எடுத்தது. சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சினெல்லே ஹென்ரி (59*) நம்பிக்கை தந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் பூஜா 3, தீப்தி சர்மா 2 விக்கெட் சாய்த்தனர்.

Advertisement