பரிசுகள் பெற்ற பிரதமர் பதவி விலகினார் எம்.பி.,

லண்டன்,பிரதமர் உள்ளிட்ட ஆளுங்கட்சியினர் சிலர், பல்வேறு தரப்பினரிடம் இருந்து விலைஉயர்ந்த பரிசு பொருட்களை பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரிட்டன் ஆளுங்கட்சி எம்.பி., கட்சியில் இருந்து விலகினார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கடந்த, ஜூலையில் நடந்த தேர்தலில் வென்று தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கெய்ர் ஸ்டாமர், பிரதமராக பதவியேற்றார்.

இந்தக் கட்சியைச் சேர்ந்த கென்ட் மாகாணத்தின் சென்டர்பெரியின் எம்.பி.,யான ரோசி டபீல்டு, கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து, அவர் பார்லிமென்டில், எந்தக் கட்சியையும் சாராத சுயேச்சைஎம்.பி.,யாக இருப்பார்.

கட்சியில் விலகியது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் ரோசி டபீல்டு கூறியுள்ளதாவது:

பல்வேறு தனிநபர்களிடம் இருந்து பிரதமர் கெய்ர் ஸ்டாமர் உட்பட கட்சியினர் விலையுயர்ந்த பல நன்கொடைகளை, பரிசுகளை பெற்றுள்ளனர்.

இது முறைப்படி கணக்கு காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற பரிசுகளை பெறுவது முறையானதல்ல. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். அரசிடம் இருந்து பிரதிபலன் எதிர்பார்க்காமலா இந்த பரிசுகள் வழங்கப்பட்டிருக்கும் என்ற கேள்வி மக்களுக்கு எழும்.

இது அரசியலில் முறையானதல்ல. சேவை அரசியலுக்கும் எதிரானதாகும். மிகவும் யோசித்து, கடைசி வாய்ப்பாக கட்சியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement