த.வெ.க., மாநாடு பணிகள் விறுவிறு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநாடு பணிகள் துவங்கின.


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், அக். 27ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநில மாநாடு நடைபெற உள்ளது.


நேற்று முன்தினம் பந்தக்கால் நடப்பட்டது. மாநாடு நடைபெறும் இடத்தினை சமன்படுத்தி அப்பகுதியில் உள்ள ஆறு கிணறுகளுக்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி, மேடை அமைக்க அடித்தள பைப்புகள் நடும் பணி நடக்கின்றன.


மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் தடையின்றி வழங்கும் பணி தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


ஆண்கள், பெண்களுக்கு 250 மொபைல் டாய்லெட்கள், வாகனங்கள் நிறுத்த சாலையின் இரு புறங்களிலும் 50 ஏக்கர் அளவில் இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


மாநாடு மேடை அமைக்கும் பணி, சினிமா கலை அரங்க இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேடை 90 அடி நீளத்திலும், 85 அடி அகலத்திலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணிகளையும் பிரித்து தனித்தனியாக ஒப்பந்தம் செய்துள்ளதால் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement