ஸ்குவாஷ்: ஜோஷ்னா அபாரம்

லான்காஸ்டர்: அமெரிக்க ஸ்குவாஷ் முதல் சுற்றில் ஜோஷ்னா சின்னப்பா வெற்றி பெற்றார்.
அமெரிக்காவில் பெண்களுக்கான சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் 'சீனியர்' வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா இதில் களமிறங்கினார். முதல் சுற்றில் அமெரிக்காவின் ஆட்ரே பெர்லிங்குடன் மோதினார்.
முதல் செட்டை ஜோஷ்னா 11-3 என எளிதாக கைப்பற்றினார். அடுத்த செட்டை 11-7 என வசப்படுத்திய இவர், மூன்றாவது செட்டையும் 11-6 என வென்றார். 22 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் ஜோஷ்னா, 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இரண்டாவது சுற்றில் ஜோஷ்னா, இங்கிலாந்தின் கேட்டீ மாலிப்பை சந்திக்க உள்ளார்.

Advertisement