ரூ.65 லட்சம் நில மோசடி கொடுங்கையூர் நபர் கைது

ஆவடி:செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார், மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் ராமநாதன், 56. இவர், ஜூலை 26ம் தேதி, ஆவடி மத்திய குற்றப் பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால், கொடுங்கையூரைச் சேர்ந்த இளங்குமரன், 49, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அதன்படி, இளங்குமரன், ஜன., முதல் ஏப்., வரை மாதவரம், கொரட்டூர் மற்றும் பொன்னேரி ஆகிய இடங்களில், தனக்கு சொந்தமாக நிலம் இருப்பதாக கூறி, வேறு ஒருவரின் நிலத்தை போலியான ஆவணங்கள் தயார் செய்து, எனக்கு விற்றுள்ளார்.

வில்லங்க சான்று போட்டு பார்த்த போது, நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். தொடர்ந்து, பணத்தை திருப்பிக் கேட்டபோது, பணத்தை தராமல் ஏமாற்றினார்.

இதன் மதிப்பு 65.50 லட்சம் ரூபாய். எனவே, என்னை ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, புகாரில் கூறியிருந்தார்.

இது குறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார், தலைமறைவாக இருந்த இளங்குமரனை, பொள்ளாச்சி, ஆனைமலை என்ற இடத்தில் வைத்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.

Advertisement