வினைதீர்த்தபுரம் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்



நாமக்கல்: நாமக்கல், செல்லப்பம்பட்டி அடுத்த புதன்சந்தை வினைதீர்த்த-புரத்தில், பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த, 14ல், காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாளிகையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து, மாரியம்மன்- கோபுர கல-சங்கள் யாகசாலை வருகை, கலச பூஜை நடந்தது.


மேலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் காலயாக பூஜை, பூர்ணா-குதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, கடம் புறப்பாடும் நடந்தது. காலை, 6:00 மணிக்கு, கணபதி, மகா மாரியம்மன் கோபுர கும்பாபிஷேகமும், மகா மாரியம்மன் மூலஸ்தானம், கணபதி துர்க்கை நவக்கிரக மூலஸ்தானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், ஆரா-தனை, சுவாமி தரிசனம் நடந்தது. ஏற்பாடுகளை, தர்மகர்த்தா சர-வணன், விழாக்குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.

Advertisement