ப.வேலுாரில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் போலீசார் இரவு ரோந்து செல்ல கோரிக்கை

ப.வேலுார்: ப.வேலுார் - மோகனுார் சாலை, சின்னு நகரை சேர்ந்தவர் பெரி-யசாமி, 66; நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் மேலாளராக பணிபு-ரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுமதி, 60. இவர்கள் கடந்த, 11ல் சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில், நேற்று பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள், பெரியசா-மியில் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'உங்கள் வீட்டின் பின் கதவு திறந்து கிடப்பதாக' தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து, பெரியசாமி, ப.வேலுார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.


போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், 2 பீரோக்களை உடைத்-தது தெரியவந்தது. அங்கு, காலி நகை பெட்டிகள் சிதறி கிடந்-தன. வீட்டினுள் இருந்த கேமராவை உடைத்துவிட்டு, பின்வாசல் வழியாக முகமூடி கொள்ளையர்கள் சென்றது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் சோதனை நடத்தினர். 20க்கும் மேற்பட்ட பவுன் நகை திருடு போயிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. பெரியசாமி, சுமதி தம்பதியர் வீட்டிற்கு வந்த பிறகே, திருடு போன நகையின் மதிப்பு தெரியவரும் என, போலீசார் தெரிவித்-தனர். இதேபோல், இவரது வீட்டின் அருகே சிவசாமி, 60, வசித்து வருகிறார். அரசு வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கனகு, 55. இவர்களது வீட்டிலும் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து, கதவை உடைக்க முடியாமல் திரும்பி-யது, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது.இதுகுறித்து, சின்னு நகரை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் கூறியதா-வது: இப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும், ப.வேலுார் எம்.எல்.ஏ., சேகரின் அலுவலகம் உள்ளது. பெரும்பாலான வீடுகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்-ளது. இப்பகுதியில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இதுகுறித்து பலமுறை ப.வேலுார் போலீசில் தகவல் தெரிவித்துள்ளோம். ஆனால், எந்த நடவடிக்-கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் ரோந்து பணியை இனிமே-லாவது மேற்கொள்ள வேண்டும். முகமூடி கொள்ளையர்-களால், இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இவ்-வாறு அவர்கள் கூறினர்.

Advertisement