கோவில் குளத்தை சுற்றி குப்பை தொட்டி வைக்காததால் அதிருப்தி

பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சியில் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. நவகிரகங்களில் இக்கோவில் செவ்வாய் தலமாக விளங்குகிறது.

கோவிலின் கிழக்கு புறம் வினை தீர்த்த குளம் உள்ளது. இக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். கோவில் நிர்வாகம் சார்பில், குளத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குளத்தை சுற்றியுள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில் அங்கு குப்பை தொட்டிகள் வைக்கவில்லை.

இதனால், அப்பகுதியினர் குளத்தை சுற்றி குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் குளத்தை சுற்றியுள்ள தெருக்களில் துார்நாற்றம் வீசுகிறது.

குளத்தை சுற்றியுள்ள மூன்று தெருக்களிலும் பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்தினர் குப்பை தொட்டி அமைத்து, தினமும் குப்பையை அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்கின்றனர்.

Advertisement