வசந்த மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டிய அமைச்சர்

சேலம்: சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ராஜகணபதி கோவிலில் வசந்த மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கு அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா, அவரது சொந்த செலவில், 24.75 லட்சம் ரூபாயில் கட்ட, அரசு அனுமதி பெற்று, அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.


இதற்கு அதிகாலை முதல், ராஜகணபதிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. சுற்று-லாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தரிசனம் செய்தார். தொடர்ந்து சிவாச்சாரியார், வேதங்கள் முழங்க அர்ச்சனை நடந்தது. மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து கோவில் எதிரே, அதன் சொந்த இடத்தில் மண்-டபம் கட்டுவதற்கான பூமி பூஜை, அடிக்கல் நாட்டும் விழா நடந்-தது. அமைச்சர் ராஜேந்திரன், அடிக்கல் நாட்டி தொடங்கினார். தொடர்ந்து சுகவனேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பாவும் அடிக்கல் நாட்டினார். கோவில் தலைமை குருக்கள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement