உபரி நீரால் அனைத்து விவசாயிகளுக்கும் பலன் பாராட்டு விழாவில் இ.பி.எஸ்., பெருமிதம்

மேட்டூர்: ''மேட்டூர் அணை உபரி நீரை ஏரிகளில் நிரப்புவதால் அ.தி.மு.க., விவசாயிகள் மட்டுமல்ல. அனைத்து கட்சி விவசாயிகளும் பலன் அடைகின்றனர்,'' என இ.பி.எஸ்., பேசினார்.

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே எம்.காளிப்பட்டியில், நேற்று மாலை நடந்த விவசாயிகள் விழாவில், காவிரி உபரி நீர் நடவடிக்கை குழு தலைவர் வேலன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் விவசாயிகள் பாராட்டை ஏற்று கொண்டு முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:நான் அமைச்சராகும் போது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட விவசா-யிகள் நடத்தும் பாராட்டு விழாவில் பங்கேற்றதை வாழ்நாளின் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். நான் ஒரு விவசாய குடும்-பத்தில் பிறந்தவன். ஒரு விவசாயிக்குதான் மற்ற விவசாயிகளின் நிலை தெரியும். மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை நிறை-வேற்ற, நான் அமைச்சராக இருந்தபோது முதல்வர் ஜெயலலிதா-விடம் தெரிவித்தேன். அது நல்ல திட்டம் நிறைவேற்றலாம் என ஜெ., கூறிய நிலையில் துரதிஷ்டவசமாக உயிரிழந்து விட்டார்கள். அவர்களின் மனதில் இருந்த திட்டம் நான் முதல்வர் ஆனதும், 565 கோடி ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தினேன். தற்-போது, 46 ஏரிகளில் உபரி நீர் நிரப்பப்பட்டுள்ளது. அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 100 ஏரிகளிலும் முழுமையாக உபரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
மேட்டூர் அணை உபரி நீரை வறண்ட ஏரிகளில் நிரப்பும் திட்டம், அத்திகடவு-அவினாசி திட்டம், தலைவாசல் கால்நடை பண்ணை திட்டம், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம், அணை, ஏரி-களை துார்வாரும் திட்டத்தை அ.தி.மு.க.,வே முதன்முறை துவங்கியது.
அனைத்து திட்டங்களையும் அடுத்து வந்த தி.மு.க., அரசு, 48 மாதங்கள் ஆகியும் கிடப்பில் போட்டுள்ளது. கோட்டையில் இருந்து கோப்புகளை மட்டும் பார்த்தால் போதாது. விவசாயி-களின் உள்மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டூர் அணைக்கு கர்நாடகா நீர்திறக்க வேண்டும் என உச்சநீதி-மன்றத்தில் தீர்ப்பு பெற்று அரசு நாளிதழில் வெளியிட நடவ-டிக்கை எடுத்தது அ.தி.மு.க., அரசுதான். நாம் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைக்கும் வேலையை மட்டுமே தி.மு.க., செய்கிறது.
மேட்டூர் அணை உபரி நீரை வறண்ட ஏரிகளில் நிரப்புவதால் பாச-னத்துக்கு பயன்படுவது மட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டமும் உயர்-கிறது. உபரி நீரை ஏரிகளில் நிரப்புவதால் அ.தி.மு.க., வை சேர்ந்த விவசாயிகள் மட்டும் பலனடையவில்லை. அனைத்து கட்சி விவசாயிகளும் பலனடைகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
டிராக்டர் பரிசு
பாராட்டு விழாவில் பங்கேற்ற இ.பி.எஸ்.,க்கு விவசாயிகள், வெள்ளி செங்கோல் பரிசளித்தனர். மேட்டூர் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள் டிராக்டர் பரிசளித்தனர். நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநிலங்க-ளவை எம்.பி., சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓமலுார், சங்க-கிரி எம்.எல்.ஏ.,க்கள் மணி, சுந்தரராஜன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் லலிதா, வழக்கறிஞர் அணி செயலாளர் சித்தன், மேச்-சேரி டவுன்பஞ்., செயலாளர் குமார், மேச்சேரி கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், செல்வம் உள்ளிட்ட நிர்வா-கிகள் பங்கேற்றனர்.
மக்காசோளத்தில் நோய் தாக்குதல்
தடுக்க ரூ.186 கோடி ஒதுக்கீடு
இ.பி.எஸ்., பேசுகையில், ''நான் அமைச்சராக இருந்தபோது, விவசாயிகள் சாகுபடி செய்த மக்காசோளத்தை அமெரிக்கன் படைபுழு தாக்கி சேதப்படுத்தியது. அதற்கு அரசு சார்பில், 186 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் படைபுழு பாதிப்பை தடுக்க, மருந்துகள் வழங்க, 48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது,'' என்றார்.

Advertisement