மேட்டூர் அணை நீர் திறப்பு 2,000 கன அடியாக குறைப்பு

மேட்டூர்: தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகு-தியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 7,084 கன அடியாக இருந்த நிலையில், 9,154 கனஅ-டியாக நேற்று அதிகரித்தது.
அதேசமயம் டெல்டா மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், பாசனத்துகான நீர் தேவை குறைந்துள்-ளது. அதற்கேற்ப மேட்டூர் அணை நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்-ளது. நேற்று முன்தினம் காலை, 3,000 கன அடியாக இருந்த நிலையில், 2,000 கன அடியாக நேற்று மதியம் குறைக்கப்பட்-டது. அணை நீர்மட்டம், 106.51 அடியாக இருந்தது.
* மேட்டூர் அணையில் நீர் மின் நிலையத்தில், 50 மெகாவாட், சுரங்க மின் நிலையத்தில், 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்-யலாம். இதற்கு அணையில் அதிகபட்சம், 23,000 கனஅடி நீர் வெளியேற்ற வேண்டும். நேற்று அணையில் இருந்து, 2,000 கன அடி நீரே திறக்கப்பட்டதால் அணை, சுரங்க மின் நிலையங்-களில், 20 மெகாவாட் மட்டுமே மின்னுற்பத்தி செய்யப்பட்டது.

Advertisement