சேலம் அருகே ரயிலில் அடிபட்டு 2 மாணவர் பலி மொபைல் கேம் விளையாட்டால் விபரீதம்
பெ.நா.பாளையம்: சேலம் அருகே, மொபைல்போனில் 'கேம்' விளையாடியபடி தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயிலில் அடிபட்டு, பள்ளி மாணவர்கள் இருவர் பலியாகினர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்-பாளையத்தை சேர்ந்த குமார் மகன் தினேஷ், 16; ரவிக்குமார் மகன் அரவிந்த், 16; நண்பர்களான இருவரும், ஏத்தாப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கின்றனர். இருவரும் நேற்று காலை, 11:40 மணிக்கு, ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவில் அருகே ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றனர். அப்போது சேலத்தில் இருந்து விருதாசலம் நோக்கி சென்ற பய-ணியர் ரயில், இருவர் மீதும் மோதியது. இதில் தினேஷ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த அரவிந்த்தை அப்பகுதி மக்கள் மீட்டு, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவம-னையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்தார்.
இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் கூறுகையில், 'மாணவர்கள் இருவரும் மொபைல்போனில் கேம் விளையாடியபடி சென்ற-போது ரயிலில் அடிபட்டது, முதற்கட்ட விசாரணையில் தெரிய-வந்தது' என்றனர்.