தஞ்சாவூர் ஆசிரியை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி: முதல்வர் உத்தரவு
சென்னை: தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ரமணி என்ற ஆசிரியை மதன்குமார் என்பவரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும், அடைந்தேன். இச்சம்பவம் மிருகத்தனமானது. குற்றவாளி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும்.
ரமணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை
இதனிடையே, தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியை அமைச்சர் மகேஷ் ஆய்வு செய்தார். பிறகு அவர், புள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், கவுன்சிலிங் கொடுத்த பிறகு தான் பள்ளி திறக்கப்படும் எனவும் கூறினார்.