நீட் இளநிலைத்தேர்வு நடைமுறையில் மாற்றமில்லை!

புதுடில்லி: நீட் இளநிலைத்தேர்வு, ஓ.எம்.ஆர்., தாள் அடிப்படையில் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் இளநிலைத்தேர்வு கடந்தாண்டும் ஓ.எம்.ஆர்., அடிப்படையில் பேனா, காகிதம் கொண்டு நடத்தப்பட்டது. அதில் பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்தன. இதையடுத்து இந்தாண்டு தேர்வு, ஆன்லைன் முறைக்கு மாற்றப்படலாம் என்றும் பரவலாக கருத்துக்கள் எழுந்தன.
ஆனால், இன்று அது குறித்த தன் முடிவை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, ஓ.எம்.ஆர்., தாள் அடிப்படையில் பேனா, காகிதம் கொண்டு தேர்வு நடத்தப்படும், ஒரே நாளில், ஒரே ஷிப்டில் தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அதாவது, கடந்தாண்டு நடத்தப்பட்டது போலவே தேர்வு நடத்தப்படும்; நீட் தேர்வு நடைமுறையில் மாற்றம் எதுவுமில்லை என்பது இந்த அறிவிப்பின் மூலம் தெளிவாகியுள்ளது.

Advertisement