மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
சிவகங்கை, : மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லுாரிகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
* சிவகங்கை தினமலர் கிளை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றப்பட்டது. ஊழியர்கள் பங்கேற்றனர்.
* கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஆஷா அஜித் கொடியேற்றினார். தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயுஷ் வெங்கட்வத்ஸ், எஸ்.பி., ஆஷீஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தியாகிகள், அவர்களது வாரிசுகளுக்கு கலெக்டர் மரியாதை செய்தும், 60 போலீசாருக்கு முதல்வர் பதக்கமும், அரசு அலுவலர்களுக்கு சான்றும் வழங்கினார். பயனாளிகள் 17 பேருக்கு ரூ.30.83 லட்சம் நலத்திட்ட உதவி வழங்கினார். விழாவில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துக்கழுவன், கோட்டாட்சியர் விஜயகுமார் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
* இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை போலீஸ் பயிற்சி மையத்தில் டி.ஐ.ஜி., அச்சல் சர்மா கொடியேற்றினார். கமாண்டன்ட் அதிகாரி ஜூவேர் ஆலம், கண்காணிப்பாளர் வி.ஆர்., சந்திரன், உதவி கமாண்டன்ட் ராகுல்சிங் ரானா உட்பட புதிதாக பயிற்சியில் சேர்ந்த 1,500 வீரர்கள் பங்கேற்றனர்.
* சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதல்வர் மனோஜ்குமார் சர்மா கொடியேற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மூத்த ஆசிரியர் செல்வம் நன்றி கூறினார். ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.
* தபால் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் மாரியப்பன் கொடியேற்றினார். அலுவலர்கள் பங்கேற்றனர்.
* சிவகங்கை மாவட்ட நுாலகத்தில் முதல்நிலை நுாலகர் வெங்கடவேல்பாண்டி கொடியேற்றினார். வாசகர் வட்ட தலைவர் அன்புத்துரை, எழுத்தாளர் ஈஸ்வரன், நுாலகர் முத்துக்குமார் பங்கேற்றனர்.
* கல்லல் முருகப்பா மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் அழகப்பன் கொடியேற்றினார். ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.
* சோழபுரம் ரமணவிகாஸ் மேல்நிலை பள்ளியில் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன் கொடியேற்றினார். மூத்த வழக்கறிஞர் மோகனசுந்தரம், முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் கொடியேற்றினர். ஆசிரியை செல்வகண்ணாத்தாள், சோழபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் சேவியர், கார்த்திக், உதவி தலைமை ஆசிரியர் கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
* சிவகங்கை அல்குதா இஸ்லாமிக் இன்டர்நேஷனல் பள்ளியில் வழக்கறிஞர் ராம்பிரபாகர் கொடியேற்றினார். பள்ளி தாளாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.
* மேலவாணியங்குடி வீரமாகாளியம்மன் மெட்ரிக் பள்ளியில் பள்ளி தாளாளர் அசோக்குமார் கொடியேற்றினார். பெக்கி சிறப்புரை ஆற்றினார். முதல்வர் செல்லமணி, ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.
* இடையமேலுார் விக்னேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் தனியார் பள்ளிகள் சங்க மாநில தலைவர் மார்டின் கென்னடி கொடியேற்றினார். முதல்வர் ஜான்சி, நிர்வாகி ஜான் ஆரோக்கியபிரபு, ஆசிரியை ஜாஸ்மி பங்கேற்றனர்.
* சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். வார்டு கவுன்சிலர் பாக்கியலட்சுமி கொடியேற்றினார். கலைத்திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.
* ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளியில் நிறுவனர் சியாமளா வெங்கடேசன் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர் ராமு, முதல்வர் கீதா பங்கேற்றனர். மாணவி சக்தி வரவேற்றார். விழாவில் தினமலர் நாளிதழ் நடத்திய பட்டம் வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினர்.
* சூரக்குளம் ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளியில் நிறுவனர் சியாமளா வெங்கடேசன், செயலாளர் மீனா ஆனந்தகுமார், ராணுவவீரர் சிவாஜி, முதல்வர் சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* சாய் பாலமந்திரி நர்சரி பிரைமரி பள்ளியில் தலைமை ஆசிரியர் கோமதிபாலா வரவேற்றார். ஆசிரியர் இந்திராகாந்தி கொடியேற்றினார். பள்ளி நிர்வாகி குமார், ஆசிரியர் கவிதா பங்கேற்றனர்.
* பாலமுருகன் நர்சரி, பிரைமரி பள்ளியில் தலைமையாசிரியர் ஆர்த்திகுமார் தலைமை வகித்தார். ஆசிரியர் கல்யாணி கொடியேற்றினார்.
* மேட்டுபட்டி சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் முருகன் கொடியேற்றினார்.
* ஆர்.ஆர்.ஆர்.கே., நடுநிலைப் பள்ளியில் தலைவர் சித்ரா கொடியேற்றினார். மேலாண்மை குழு தலைவர் செல்லம்மாள், மாவட்ட கல்வி அலுவலர் பாலாமணி, தலைமை ஆசிரியர் சுரேஷ் ஜான்தாமஸ் பங்கேற்றனர்.
* பாப்பாகுடி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கொடியேற்றினார். உதவி ஆசிரியர் சந்திரபிரேமா வரவேற்றார். ஆசிரியர்கள் ராஜா, கீதா, அபிநயா பங்கேற்றனர்.
* தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். ஆசிரியர் முத்து லட்சுமி கொடியேற்றினார். ஆசிரியர் முத்துமீனாள் நன்றி கூறினார்.
* 21ஆம் நுாற்றாண்டு மெட்ரிக் பள்ளியில் மாணவர் வீரசக்தி கொடியேற்றினார். அறங்காவலர் ராணி சத்தியமூர்த்தி, துணை முதல்வர்கள் அருணா தேவி, கனி, தலைமை ஆசிரியர் சாரதா பங்கேற்றனர்.
* நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி., மகளிர் பள்ளியில் தலைமை ஆசிரியை (பொறுப்பு) ஆரோக்கிய ஸ்டெல்லா வரவேற்றார். பள்ளி குழு தலைவர் கண்ணப்பன் கொடியேற்றினார். பள்ளிக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் பங்கேற்றனர்.
* கே.ஆர்.மேனிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சரவணன் கொடியேற்றினார்.
* சாம்பவிகா மேல்நிலை பள்ளியில் செயலர் சேகர் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் தியாகராஜன் உட்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* அரசு மகளிர் கல்லுாரியில் முதல்வர் இந்திரா கொடியேற்றினார்.
* மாவட்ட நீதிமன்றத்தில் செஷன்ஸ் நீதிபதி அறிவொளி கொடியேற்றினார். குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுப்பையா, நீதிதுறை நடுவர் செல்வம், பயிற்சி நீதிபதிகள் நிவாஷ், தீபதர்ஷினி, வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகிராமன், செயலாளர் சித்திரைச்சாமி பங்கேற்றனர்.
* நகராட்சி அலுவலகத்தில் தலைவர் துரைஆனந்த் கொடியேற்றினார். துணை தலைவர் கார்கண்ணன், 48 காலனி நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியை மரியசெல்வி உட்பட கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
காரைக்குடி
* அழகப்பா பல்கலையில் துணைவேந்தர் க. ரவி கொடியேற்றினார். ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, சேகர், ராஜாராம், பதிவாளர் செந்தில்ராஜன்,தேர்வாணையர் ஜோதிபாசு பங்கேற்றனர்.
* அமராவதிப்புதூர் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் மூத்த கமாண்டன்ட் அதிகாரி சங்கர் குமார் ஜா கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
* எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., அலுவலகங்களில் மாங்குடி எம்.எல்.ஏ., கொடியேற்றினார்.
* மாநகராட்சியில் மேயர் முத்துத்துரை கொடியேற்றினார். மாநகராட்சி கமிஷனர் சித்ரா, மாநகர கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
* ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் கவுன்சிலர் நாச்சம்மை கொடியேற்றினார். பள்ளி செயலர் கார்த்திக், முதல்வர் நாராயணன் பங்கேற்றனர்.
* கிட் அண்ட் கிம் கல்லூரியில் நிர்வாக இயக்குனர் பிரியதர்ஷினி கொடியேற்றினார். முதல்வர் மயில்வாகணன், துணை முதல்வர் கற்பக மூர்த்தி பங்கேற்றனர்.
* வித்யாகிரி கல்வி நிறுவனங்களில் நிறுவன தலைவர் கிருஷ்ணன் கொடியேற்றினார்.
* மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில், பெற்றோர்கள் மனோதரன்,சித்ரா மற்றும் மோகன், கலைவாணி ஆகியோர் கொடியேற்றினர். முதன்மை முதல்வர் அஜய் யுக்தேஷ், முதல்வர் பரமேஸ்வரி பங்கேற்றனர்.
* நேஷனல் தீ பாதுகாப்பு பயிற்சி கல்லுாரியில் தாளாளர் சையது கொடியேற்றினார். நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் புலவர் மெய்யாண்டவர் கொடியேற்றினார்.
* அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பிரிட்டோ கொடியேற்றினார்.
* ஆலங்குடி யார் வீதி நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் கனகராஜ் கொடியேற்றினார்.
* அமராவதி புதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் கல்லூரி செயலர் சாரதேஸ்வரி பிரியா, ராமகிருஷ்ண பிரியா தலைமை வகித்தனர். முதல்வர் சிவசங்கரி ரம்யா வரவேற்றார். தேவகோட்டை வீரப்பன் கொடியேற்றினார்.
* செட்டிநாடு பப்ளிக் பள்ளியில், திருச்சி என்.சி.சி., பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி சுபாஷ் கொடியேற்றினார். முதல்வர் உஷா குமாரி பங்கேற்றனர்.
* அமராவதி புதூர் ராஜராஜன் கல்வி நிறுவனங்களில் மத்திய பாதுகாப்பு படை உதவி கமாண்டன்ட் மோகன் கொடியேற்றினார். முதல்வர் சிவக்குமார் வரவேற்றார்.
* சேது பாஸ்கரா வேளாண் கல்லூரியில் கமாண்டோ தர்மராஜ் கொடியேற்றினர். முதல்வர் விஷ்ணு பிரியா, செயலர் கந்தப்பழம், ஆலோசகர் தர்மராஜ் பங்கேற்றனர்.
* அழகப்பா அரசு கல்லுாரியில் முதல்வர் பெத்தாலட்சுமி கொடியேற்றினார்.
திருப்புத்தூர்
* மாவட்ட முன்சீப் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஆப்ரீன்பேகம் கொடியேற்றினார். வழக்கறிஞர்கள் பழனிச்சாமி, செந்தில்குமார், ராஜ்மோகன், முத்துக்குமார், சையது முகமது இபராகிம், நாகூர் கனி, நவநீதகிருஷ்ணன் பங்கேற்றனர்.
* டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி. செல்வக்குமார் கொடியேற்றினார்.
* மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தில் வாரிசுதாரர் ராமசாமி முன்னிலையில் தாசில்தார் மாணிக்கவாசகம் கொடியேற்றினார். ஆர்.ஐ., சந்தனப்பீர், வி.ஏ.ஓ., பாலமுருகன் பங்கேற்றனர்.
* ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காதர் முகைதீன் கொடியேற்றினார். பி.டி.ஓ. ரஜேந்திரகுமார், மேலாளர் சேதுராமன், கவுன்சிலர் பசீர் முகமது, அலுவலர்கள் பங்கேற்றனர்.
* ஆறுமுகம்பிள்ளை சீதைஅம்மாள் கல்லூரியில் முதல்வர் ஜெயக்குமார் கொடியேற்றினார். பேராசிரியர் சுகன்யா சிறப்புரையாற்றினார். துணை முதல்வர் அழகப்பன் வரவேற்றார். என்.சி.சி. அலுவலர் சந்திரசூடன் தலைமையில் என்.சி.சி.மாணவர்கள் அணிவகுப்பு நடந்தது.
* கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் மற்றும் பி.எட்., கல்லூரியில் முதல்வர் சசிக்குமார் கொடியேற்றினார். துணை முதல்வர் சரவணன் வரவேற்றார். உதவி பேராசிரியர்கள் வைத்தியநாதன், சுபாகர், ஆரோக்கியராஜ் பங்கேற்றனர்.
* ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் பி.எட்., கல்லுாரியில் முதல்வர் ஜெகதீசன் கொடியேற்றினார். பேராசிரியர் கார்த்திகேயன் சிறப்பு வகித்தார்.
* தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிளி சி.பி.எஸ்.இ. பள்ளியில் தாளாளர் ஜெய்சன்கீர்த்தி ஜெயபாரதன் தலைமை வகித்தார். பொறுப்பாளர் விவியன் ஜெய்சன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் மஞ்சினி கொடியேற்றினார்.
* கிறிஸ்துராஜா மெட்ரிக்., பள்ளியில் பள்ளி தலைவர் விக்டர் முன்னிலையில் தாளாளர் ரூபன் கொடியேற்றினார். முதல்வர் தபசம் கரீம் வரவேற்றார். மாணவர் தலைவி தர்ஷினி நன்றி கூறினார்.
* ஆ.பி.சீ.அ.,மெட்ரிக் பள்ளியில் முதல்வர் அமுதா கொடியேற்றினார். துணை முதல்வர் சேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* பாபா அமீர் பாதூஷா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் பாபா அமீர் பாதூஷா தலைமை வகித்தார். முதல்வர் வரதராஜன் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னாள் மாநில பொருளாளர் ஜீவானந்தம் கொடியேற்றினார். நடுவர் சபாபதி பேசினார். வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன், கவிஞர்கள் வைகை பாரதி, அப்துல்வாஹித் வாழ்த்தினர். ஒருங்கிணைப்பாளர் சந்தானலட்சுமி நன்றி கூறினார்.
* கீழச்சிவல்பட்டி ஸ்ரீ மீ.சு., மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பழ.வள்ளியம்மை கொடியேற்றினார். உதவி தலைமையாசிரியர்கள் மலைச்சாமி, வெங்கடாச்சலம் பங்கேற்றனர். மாணவ,மாணவியர் கலை நிகழ்ச்சி,பேச்சுப்போட்டி நடந்தது.
* ஆர்.எம்.மெய்யப்பச்செட்டியார் மெட்ரிக் பள்ளியில் செயலர் குணாளன் தலைமை வகித்தார். முதல்வர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். தாளாளர் பழனியப்பன் கொடியேற்றினார்.
*மாங்குடி ஊ.ஒ.நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் டி.அம்பிகா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.சாந்தி முன்னிலை வகித்தனர். எல்.மார்கரெட் சாந்தகுமாரி சிறப்புரையாற்றினார். கிராமத் தலைவர் பி.பாண்டியன் கொடியேற்றினார்.ஆசிரியை க.சுகந்தி ஒருங்கிணைத்தார். ஆசிரியை பி.குமரி அமலி ஜாய்ஸ்நிஷா நன்றி கூறினார்.
* ஆலம்பட்டி ஊ.ஓ., நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் ராவ் கொடியேற்றினார். முன்னாள் ஊராட்சி தலைவர் திலகவதி சிறப்பு வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் பாண்டியன், பள்ளி மேலாண்மை குழு தலைவி சுகன்யா, உப தலைவி அருணா, ஆசிரியைகள் முனியம்மாள், ஜலஜா, மணிமேகலை, கீர்த்தனா, பூரணம் பங்கேற்றனர். ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.
மானாமதுரை
* மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் கலையரசி கொடியேற்றினார்.
* நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் ஆறுமுகம் கொடியேற்றினார். தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், கவுன்சிலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
* குட்வில் மெட்ரிக் பள்ளியில் தாளாளர் பூமிநாதன் கொடியேற்றினார். முதல்வர் சுபாஷினி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் டாக்டர் சுடர்மதி கொடியேற்றினார். தாளாளர் கிறிஸ்டிராஜ், தலைமை முதல்வர் அருள் ஜோஸ்பின் பெட்சி, முதல்வர்கள் வள்ளி மயில், ஜீவிதா, மாரி பங்கேற்றனர்.
* பாபா நர்சரி பள்ளியில் நிர்வாகி மீனாட்சி கொடியேற்றினார். மெட்ரிக் பள்ளியில் தாளாளர் கபிலன் கொடியேற்றினார். முதல்வர் சாரதா, ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.
* பறையன்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சேவியர் ஆரோக்கியதாஸ் கொடியேற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மூர்த்தி, ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர்.
* கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜா கொடியேற்றினார். ஆசிரியர் ராஜமனோகரன், மேலாண்மை குழு தலைவர் ஜோஸ்மின், கல்வியாளர் மலைச்சாமி பங்கேற்றனர்.
இளையான்குடி
* தாசில்தார் அலுவலகத்தில் துணை தாசில்தார் முத்துவேல் கொடியேற்றினார். ஊழியர்கள் பங்கேற்றனர்.
* மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி ஹரி ராமகிருஷ்ணன் கொடியேற்றினார்.
* டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் சிறப்பு விருந்தினர் அபுபக்கர் சித்திக் கொடியேற்றினார். பி.எட்., கல்லுாரி தலைவர் அகமது ஜலாலுதீன், செயலாளர் ஜபருல்லாகான், பொருளாளர் அப்துல் அகது பங்கேற்றனர்.
* தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக அலுவலகத்தில் தலைமை ஆசிரியர் (ஓய்வு) முகமது இஸ்மாயில் கொடியேற்றினார். மாவட்ட தலைவர் துல்கருணை சேட், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
* மனிதநேய ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் தலைவர் பசீர் அகமது கொடியேற்றினார். மாவட்ட செயலாளர் உமர், நிர்வாகிகள் சிராஜ், அபுபெக்கர், உஸ்மான், சாகுல் பங்கேற்றனர்.
சிங்கம்புணரி
* சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., பாலகிருஷ்ணன் கொடியேற்றினார்.
* எஸ்.புதுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ.,செழியன் கொடியேற்றினார். பி.டி.ஓ., லட்சுமணராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் அம்பலமுத்து கொடியேற்றினார். செயல் அலுவலர் சண்முகம், துணை தலைவர் செந்தில், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
* மாவட்ட உரிமையியல் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி அபர்ணா கொடியேற்றினார். வழக்கறிஞர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
* அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். பேரூராட்சி துணை தலைவர் செந்தில் கொடியேற்றினார். பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, பள்ளி மேலாண்மை குழு தலைவி சீதா, முன்னாள் மாணவர் சங்க தலைவர் கண்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அமிர்தலிங்கம், தொழிலதிபர் சுகுமாறன் பங்கேற்றனர்.
* அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலர் அயன்ராஜ் கொடியேற்றினார்.
* எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளியில் முதல்வர் கவுரி சாலமன் தலைமையில், தாளாளர் செந்தில்குமார் கொடியேற்றினார். பள்ளி செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் பாலமுருகன் வரவேற்றார். துணை முதல்வர் பூமிநாதன் பேசினார். தமிழாசிரியர் கார்த்திகாதேவி நன்றி கூறினார்.
* எஸ்.மாம்பட்டி ஊராட்சியில் செயலர் மகேஷ் கொடியேற்றினார்.
* எஸ்.வி., மங்கலம் ஊராட்சியில் செயலர் நாகராஜ், செல்லியம்பட்டி ஊராட்சியில் செயலர் வடிவேலன், ஒடுவன்பட்டி ஊராட்சியில் செயலர் மயில்வாகனம், பிரான்மலை ஊராட்சியில் செயலர் அசோகன், கண்ணமங்கலப்பட்டி ஊராட்சியில் செயலர் ஆனந்தகுமார், ஏரியூர் ஊராட்சியில் செயலர் பெரியகருப்பன் ஆகியோர் கொடியேற்றினர்.
* பிரான்மலை துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கஸ்தூரி கொடியேற்றினார். ஆசிரியர்கள் சரவணன், முத்துப்பாண்டியன், இந்திரா, பெற்றோர்கள் பங்கேற்றனர்.
* புழுதிபட்டி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் கொடியேற்றினார். உதவி ஆசிரியர்கள் மாலா வசந்தராணி, பள்ளிமேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
* குன்னத்தூர் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன், திருவாழ்ந்தூரில் தலைமைஆசிரியர் ராஜசேகர், கரிசல்பட்டியில் தலைமை ஆசிரியர் கணேசன், பிரான்பட்டியில் தலைமை ஆசிரியர் சண்முகம், உத்தம்பட்டியில் ஆசிரியர் ஹரீஷ், வர்ணப்பட்டியில் ஆசிரியர் ஜெபஸ்டின், பள்ளர்செட்டிகுறிச்சியில் தலைமை ஆசிரியர் முத்துலெட்சுமி, வலசைபட்டியில் தலைமை ஆசிரியர் பொன்னுச்சாமி, படமிஞ்சியில் தலைமைஆசிரியர் இந்திரா, வெள்ளியங்குடிப்படியில் தலைமை ஆசிரியர் ரவி, முருக்கபட்டியில் தலைமைஆசிரியர் கலைஞானவள்ளி, கரியாம்பட்டியில் தலைமை ஆசிரியர் இந்துராணி, மணப்பட்டியில் தலைமைஆசிரியர் ராஜாத்தி, நாகமங்கலத்தில் தலைமைஆசிரியர் தனலெட்சுமி, கணபதிபட்டியில் தலைமை ஆசிரியர் அழகுமீனாள், முசுண்டபட்டியில் தலைமை ஆசிரியர் தாமஸ், கட்டுக்குடிபட்டியில் தலைமையாசிரியர் ராமசாமி ஆகியோர் கொடியேற்றினர்.
* சிறுமருதூர் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வி கொடியேற்றினார். முன்னாள் தலைமை ஆசிரியர் வனரோஜா, ஆசிரியர்கள் பாலா, ரமேஸ் சங்கர், ஜெயஸ்ரீ, ஜஸ்டின், செல்வம், சுமதி, சண்முகப்பிரியா, ராஜவனிதா, செல்வம் பங்கேற்றனர்.
* வலசைபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கண்ணப்பன் கொடியேற்றினார். ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். மாநில கலைத்திருவிழா போட்டியில் 3 ம் இடம் பிடித்த மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினர்.
தேவகோட்டை
*தேவகோட்டை நகராட்சி அலுவகத்தில் கமிஷனர் தாமரை தலைமையில், தலைவர் சுந்தரலிங்கம் கொடி ஏற்றினார். துணை தலைவர் ரமேஷ், த.மா.கா., மாநில நிர்வாகி துரைகருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. கவுதம் கொடி ஏற்றினார். டவுன் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் கொடி ஏற்றினார்.
* தியாகிகள் பூங்காவில் காங்., நகர் தலைவர் சஞ்சய் தலைமையில் அகில இந்திய காங். கமிட்டி உறுப்பினர் மீரா உசேன் கொடியேற்றினார். நகர் காங்., அலுவலகத்தில் நடராஜன் கொடி ஏற்றினார்.
* ராமகிருஷ்ண வித்யாலயா நடுநிலைப் பள்ளியில் பள்ளி தாளாளர் சோமநாராயணன் தலைமையில், தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி முன்னிலையில் அய்யாச்சாமி கொடி ஏற்றினார்.
*ஆனந்தா கல்லூரியில் கல்லூரி முதல்வர் ஜான் வசந்த் குமார் தலைமையில் ஆசிரியர் சஞ்சீவி ஞானசேகரன் கொடி ஏற்றினார்.
*ஆக்ஸ்போர்டு நர்சரி தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் அமுதாராணி முன்னிலையில் பள்ளி தாளாளர் விஜயன் கொடி ஏற்றினார். ஆசிரியர் மணிமேகலை வரவேற்றார். ஆசிரியர் சாந்தி பங்கேற்றார். மாணவர்களுக்கு நடந்த போட்டியில் பரிசுகள் வழங்கினர்.
* சேவுகன் அண்ணாமலை மெட்ரிக் பள்ளியில் தாளாளர் லெட்சுமணன் தலைமையில் கல்லூரி பேராசிரியர் கண்மணி தேசிய கொடி ஏற்றி வைத்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி முதல்வர் ஸ்ரீதேவி தொகுத்து வழங்கினார்.
* தேவகோட்டை ஒன்றியம் நாகமதி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் புரட்சித்தம்பி தலைமையில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரேவதி கொடி ஏற்றினார்.
* தேவகோட்டை நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முகமதியர்பட்டனத்தில் நகர தலைவர் அன்சர்அலி தலைமையில், மாவட்ட உலமா அணி செயலாளர் இப்ராஹிம் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். மமக நகர செயலாளர் சேக் முகமது வரவேற்றார். தமுமுக மாவட்ட செயலாளர் மீராதாஸ் கொடி ஏற்றினார். நிர்வாகிகள் முஸ்தபா, அப்துல் ரசாக், பர்க்கி பேசினர். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.