மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 76வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் நேற்று காலை 8:05 மணிக்கு தேசிய கொடியேற்றி வைத்த கலெக்டர் ஜெயசீலன் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு மூவர்ண பலுான்களை பறக்கவிட்டார்.

தொடர்ந்து எஸ்.பி., கண்ணன் வரவேற்றார். சிறப்பாக பணியாற்றிய 133 போலீசாருக்கு முதல்வரின் காவல் பதக்கம், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரத்தில் வருடாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ. 50 ஆயிரத்திற்கான காசோலை, 12 மாவட்ட நிலை அலுவலர்கள், சிறந்த ஆலை பராமரிப்பு, தொழிலாளர் நலன் காக்கும் 4 நிறுவனங்கள், அதிகமாக பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி வழங்கிய 4 நிறுவனங்கள், சிறந்த உழவர் உற்பத்தியாளர் 5 நிறுவனங்கள், பொதுநலன் சார்ந்த செயல்பாடு, சமூக மேம்பாட்டு பங்களிப்பு ஆற்றிய 55 பேர், 3 தன்னார்வ நிறுவனங்கள், 2 சிறந்த குருதிக் கொடையாளர்கள், 1 தொண்டு நிறுவனம், திருநங்கைகளின் சுகாதார நலனுக்காக சிறந்த சேவை புரிந்த 3 பேர் என்பது உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டோருக்கும், அரசு அலுவலர்கள் 158 என மொத்தம் 463 பேருக்கு கலெக்டர் ஜெயசீலன் சான்றிதழ்களை வழங்கினார்.

இதில் டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், சிவகாசி சப்-கலெக்டர் ப்ரியா ரவிச்சந்திரன், திட்ட இயக்குனர் தண்டபாணி, உதவி கலெக்டர் ஹிமான்சு மங்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

* விருதுநகர் தினமலர் அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது. ஊழியர்கள் மரியாதை செலுத்தினர்.

* காமராஜ் பொறியியல் கல்லுாரியில் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் கொடி ஏற்றினார்.துணைச் செயலாளர் முருகன் கல்லுாரி கொடியை ஏற்றினார். நிறுவன இணை மென்பொருள் உருவாக்குனர் ஜெயசுபா, கல்லுாரி முதல்வர் செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர்.

* செந்திக்குமார நாடார் கல்லுாரியில் முதல்வர் சாரதி வரவேற்றார். தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்து கொடி ஏற்றினார். என்.சி.சி., என்.எஸ்.எஸ்., ஜே.ஆர்.சி., செஞ்சுருள் சங்கம், உடற்கல்வித்துறை மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.

* எம்.எஸ்.பி., நாடார் கல்வியியல் கல்லுாரியில் முதல்வர் சுரேஷ் வரவேற்றார். தலைவர் சம்பத்குமார் கொடி ஏற்றினார்.

* வி.எஸ்.வி.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் மானேஜிங் போர்டு தலைவர் மோகன் கொடியேற்றினார்.

* அரசு போக்குவரத்து பணிமனையில் பொதுமேலாளர் துரைசாமி கொடி ஏற்றினார். ஊழியர்களுக்கும், அவரது குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்கினார்.

* நகராட்சி அலுவலகத்தில் தலைவர் மாதவன் கொடி ஏற்றினார். கமிஷனர் சுகந்தி, பொறியாளர் எட்வின் பிரைட் ஜோஸ் பங்கேற்றனர்.

* பா.ஜ., அலுவலகத்தில் கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் கொடி ஏற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

சிவகாசி



* பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் தேசியக்கொடி ஏற்றினார். டீன் மாரிசாமி வாழ்த்தினார். தேசிய மாணவர் படையின் சிறப்பு அணி வகுப்பு நடந்தது. தேசிய மாணவர் படையின் வருடாந்திர பயிற்சி முகாமில் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியதின் அடிப்படையில் மாணவர்களுக்கு ரேங்க் வழங்கப்பட்டது.

* சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வைத்து கொடி ஏற்றினார். கணிதவியல் ஆய்வுத்துறை தலைவர் பெத்தனாட்சி செல்வம் பேசினார். மாணவிகளுக்கு கவிதை வாசித்தல், சொற்பொழிவு, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேரவை ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்மின் ஸ்டெல்லா நன்றி கூறினார். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி, கல்லுாரி மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் மங்கையர்கரசி, ஜோஸ்மின் ஸ்டெல்லா, தேசிய மாணவர் படை திட்ட அலுவலர் பானுமதி, மாணவர் பேரவை பேராசிரியர்கள், மாணவ உறுப்பினர்கள் சுரேகா, துஷ்ரத் முபினா டெத் லக்ஷ்மி செய்தனர்.

* சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் தேசிய மாணவர் படை கம்பெனி கமாண்டர் பீமராஜ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அசோக் தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றினார் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. மெட்ராஸ் பட்டாலியன் சிப்பாய் விக்னேஷ் பேசினார்.

* சாத்துார் மேட்டமலை கிருஷ்ணசாமி கலை, அறிவியல் கல்லுாரியில் தலைவர் ராஜு தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றினார். துணை தலைவர் பாப்பா ராஜு, செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது.

* சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் செயலர் செல்வராஜன் தலைமை வகித்தார். மாணவி பிரசாந்தினி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தேசிய உறுதிமொழியை வாசித்தார். துணை முதல்வர் முத்துலட்சுமி தேசிய இளைஞர் தின உறுதிமொழி வாசித்தார்.

* குடியரசு தின விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருத்தங்கலில் உள்ள தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றினார்.

* சிவகாசி அரசு கல்லுாரியில் நடந்த குடியரசு தின விழாவில் கல்லுாரி முதல்வர் பாலாஜி தேசியக்கொடி ஏற்றினார். தமிழ் துறை தலைவர் கிளி ராஜ் பேசினார்.

* சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மேயர் சங்கீதா தேசிய கொடி ஏற்றினார். கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

* சிவகாசி சார்பு நீதிமன்றத்தில் நடந்த குடியரசு தின விழாவில் நீதிபதி முருகவேல் தேசியக்கொடி ஏற்றினார்.

* சிவகாசி காக்கி வாடன்பட்டி ஆர். பொன்னுச்சாமி நாயுடு கல்வியியல் கல்லுாரி, கே.ஆர்.பி. கலை, அறிவியல் கல்லுாரியில் தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். முதல்வர் ராம் ஜெயந்தி முன்னிலை வகித்தார். கல்வியல் கல்லுாரி முதல்வர் கண்ணன் தேசியக்கொடி ஏற்றினார்.

* சிவகாசி மைனாரிட்டி எஜுகேஷன் டிரஸ்ட் சார்பில் நிறுவனர் செய்யது ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் தேசியக்கொடி ஏற்றினார்.

அருப்புக்கோட்டை



* அருப்புக்கோட்டை நகராட்சியில் தலைவர் சுந்தரலட்சுமி கொடியேற்றினார். கமிஷனர் ராஜமாணிக்கம், துணைத் தலைவர் பழனிச்சாமி, முன்னாள் நகராட்சி தலைவர் சிவபிரகாசம், தி.மு.க., நகர செயலர் மணி, அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

* அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி செல்வன் ஜேசுராஜா கொடி ஏற்றினார். வக்கீல் சங்க செயலர் ராஜேந்திரன், மூத்த வக்கீல் தங்க வடிவேல், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* தாலுகா அலுவலகத்தில் துணைத் தாசில்தார் பானுமதி கொடியேற்றினார்.

* ரமணாஸ் மகளிர் கலை கல்லூரியில் செயலாளர் இளங்கோவன், பி.எட்., கல்லூரியில் செயலாளர் சங்கரநாராயணன் கொடியேற்றினர். கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன், முதல்வர்கள் தில்லை நடராஜன் ராஜேந்திரன், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* எஸ்.பி.கே., கல்லூரியில் முதல்வர் செல்லதாய் கொடியேற்றினார். செயலாளர் சங்கர சேகரன் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் மயில் ராஜன், பொருளாளர் பிரபாகரன் பரிசுகள் வழங்கினர்.

* மினர்வா பப்ளிக் பள்ளியில் செயலாளர் கண்ணன் கொடியேற்றினார். முதல்வர் வேணி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

* ஆ.கல்லுப்பட்டி சித்தி விநாயகர் இந்து துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியை சரளாதேவி கொடியேற்றினார். மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது.

* சாலியர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலமுருகன் கொடியேற்றினார்.

* அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரி இளங்கோ கொடி ஏற்றினார். டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* திருச்சுழி வைத்தியலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியில் செயலாளர் பெரியணராஜன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார்.

ஸ்ரீவில்லிபுத்துார்



* கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் துணைத்தலைவர் சசிஆனந்த் தலைமையில், துணை வேந்தர் நாராயணன் கொடி ஏற்றினார். பதிவாளர் வாசுதேவன் பங்கேற்றார். என்.சி.சி.மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.

* லயன்ஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி, மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளில் தாளாளர் வெங்கடாசலபதி கொடியேற்றினார். முதல்வர்கள் சுந்தர மகாலிங்கம், சிவக்குமார், துணை முதல்வர்கள் பாண்டீஸ்வரி, முகம்மது மைதீன் பங்கேற்றனர்.

* ஒயிட் பீல்ட் துவக்க பள்ளியில் ஒருங்கிணைப்பாளர் சுமதி தலைமையில் முதல்வர் வனிதா கொடியேற்றினார்.

* பென்னிங்டன் பள்ளியில் கமிட்டி துணை தலைவர் முத்துபட்டர் கொடியேற்றினார்.

* மகாத்மா வித்யாலயா பள்ளியில் முதல்வர் ராணி தலைமையில் குடியரசு தின விழா நடந்தது. தாளாளர் முருகேசன் கொடியேற்றினார். நண்பர்கள் ரோட்டரி சங்க தலைவர் பால்சாமி, செயலாளர் சமுத்திரம் பங்கேற்றனர்.

* வத்திராயிருப்பு ரங்கராவ் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் பள்ளி தலைவர் சுந்தரராஜன் பெருமாள் கொடியேற்றினார். நிர்வாகிகள் விஜயகுமார், டாக்டர் பால்சாமி, முதல்வர் ராஜேஸ்வரி, ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். தினமலர் பட்டம் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் ஸ்ரீநிதி, ரம்யா கவுரவிக்கபட்டனர்.

சாத்துார்



* சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்., கல்லுாரியில் 76வதுகுடியரசு தின விழா நடந்தது. இணைச் செயலாளர் சீனிவாசன் தேசியக்கொடி ஏற்றினார். கல்லுாரி முதல்வர் ராஜகுரு முன்னிலை வகித்தார். அனைவரும் தேசிய உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பேராசிரியர் ராமநாதன் பேசினார்.

* சாத்துார் மேட்டமலை ஸ்ரீகிருஷ்ணசாமி கலை, அறிவியல் கல்லுாரி, பி.எஸ்.என்.எல்.பி.எட்.,கல்லுாரியில் தலைவர் ராஜுதேசியக்கொடி ஏற்றினார். துணைத்தலைவர் பாப்பாராஜு, செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். முதல்வர்கள்உஷா தேவி, ராஜேஸ்வரி பேசினர்.

Advertisement