திருவாடானை கிராமங்களில் பயிர் மதிப்பீட்டு ஆய்வு

திருவாடானை : திருவாடானை தாலுகாவில் உள்ள 6 கிராமங்களில் பயிர் மதிப்பீட்டு ஆய்வு பணிகள் விரைவில் துவங்க உள்ளது.

திருவாடானை தாலுகாவில் இந்த ஆண்டு 26 ஆயிரத்து 650 எக்டேரில் சாகுபடி பணிகள் துவங்கியது. தற்போது அறுவடை பணிகள் நடக்கிறது. பயிர் மகசூல் குறித்து மதிப்பீட்டு ஆய்வு பணிகள் விரைவில் துவங்க உள்ளது.

இது குறித்து வேளாண் அலுவலர்கள் கூறியதாவது- வருவாய்த்துறை, புள்ளியியல் துறை, வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் மகசூல் குறித்து பயிர் மதிப்பீட்டு ஆய்வு பணிகள் ஆண்டுதோறும் நடைபெறும்.

இந்தாண்டு பயிர் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளபட வேண்டிய கிராமங்கள், பயிர்களின் பரப்பளவு, விளைச்சல் விபரங்கள் குறித்து விரைவில் ஆய்வு செய்யபடும்.

திருவாடானை தாலுகாவில் 6 கிராமங்கள் தேர்ந்தெடுக்கபட்டு அதற்கான பணிகள் துவங்கும். இப்பணிகளை திறம்பட செய்வதற்காக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கபட்டு வருகிறது. ஆய்வுகளின் போது புள்ளி விபரங்களை சேகரித்தும், விளைச்சல் விபரங்களை துல்லியமாக கணித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கபடும் என்றனர்.

Advertisement