சங்கரலிங்கனார் பிறந்தநாள்

விருதுநகர் : விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனாரின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு மணி மண்டபத்தில் கலெக்டர் ஜெயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் எம்.எல்.ஏ., சீனிவாசன், தென்காசி எம்.பி., ராணி, நகராட்சி தலைவர் மாதவன், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

* கைவண்டி, மாட்டுவண்டி சுமை ஏற்றுமதி, இறக்குதி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளர் பிச்சைக்கனி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் நகர்நல அமைப்பாளர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார்.

* மக்கள் நீதிமய்யம் சார்பில் மத்திய மாவட்டச் செயலாளர் காளிதாஸ் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர செயலாளர் கமல் கண்ணன், ஆதிதிராவிட அணி அமைப்பாளர் பன்னீர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement