நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

விருதுநகர் : விருதுநகர் நகராட்சியுடன் கலெக்டர் அலுவலக வளாகம், அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி, கோட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை இணைப்பதால் நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நம்பியுள்ள மக்கள் பாதிக்கப்படுவர்,


நலத்திட்டங்கள் பறிபோகும் என்பதால் கூரைக்குண்டு ஊராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழா கிராம சபை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Advertisement