ஓட்டுநர் தினம்

விருதுநகர் : விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் 36வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு ஓட்டுநர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறந்த டிரைவர்கள் 9 பேருக்கு மண்டல பொது மேலாளர் துரைசாமி பரிசுகளை வழங்கினார்.

மேலும் ராஜபாளையம்- 1 கிளை அரசு போக்குவரத்து கழக டிரைவர் குழந்தைவேல் என்பவருக்கு டில்லியில் உள்ள அனைத்து மாநில சாலை போக்குவரத்து பேரவை விருதுக்கான ரூ. 5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

Advertisement