விடுமுறை வழங்காத 89 கடைகள் மீது நடவடிக்கை
விருதுநகர் : தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மைவிழிச்செல்வி செய்திக்குறிப்பு:
விருதுநகர் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காமல் பணியில் ஈடுபடுத்திய 48 கடைகள், நிறுவனங்கள், 36 உணவு நிறுவனங்கள், 5 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 89 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் தேசிய விடுமுறையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம், மூன்று நாட்களுக்குள் மாற்று விடுப்பு வழங்க வேண்டும்.
இதை மீறினால் மதுரை தொழிலாளர் இணை கமிஷனரால் நீதிமன்றத்தில் கேட்பு மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement