வெளியேறும் வங்கதேசத்தினர்: பஸ், ரயில்களில் கண்காணிப்பு

13

சென்னை: திருப்பூர், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து, வங்கதேசத்தினர் வெளியேறுவதால், அவர்களை கைது செய்ய, பஸ், ரயில் நிலையங்களில், போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள வங்கதேசத்தினர், மேற்கு வங்க மாநிலத்தவர் போல், போலி ஆவணங்கள் தயார் செய்து, தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அவர்களில், பெரும்பாலானோர் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதும், பயங்கரவாத செயலுக்கு சதி திட்டம் தீட்டி வருவதும் தெரிய வந்துள்ளது.


இதனால், மாநிலம் முழுதும் வங்கதேசத்தினருக்கு எதிராக, உள்ளூர் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த ஒரு வாரத்தில், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 63 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து, வங்கதேசத்தினர் வெளியேறி வருகின்றனர். அவர்களை கைது செய்ய, பஸ், ரயில் நிலையங்களில், போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


இது குறித்து போலீசார் கூறுகையில்,' பிப்., மாத இறுதிக்குள் வங்கதேசத்தினர் ஒருவர் கூட தமிழகத்தில் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம்' என்றனர்.

Advertisement