டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு 'பத்மஸ்ரீ': ஹிந்து முன்னணி பாராட்டு

திருப்பூர்: 'தினமலர் நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது, தமிழக பத்திரிகை துறைக்கு கிடைத்த மாபெரும் கவுரவம்' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பாராட்டு தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: தமிழகத்தில், தேசபக்தி மற்றும் தெய்வபக்தியை அடித்தட்டு மக்களுக்கும், பத்திரிகை வாயிலாக கொண்டு சேர்த்ததில், 'தினமலர்' நாளிதழ் முன்னோடியாக விளங்குகிறது. அதற்கு மிக முக்கிய பங்கு வகித்தவர் 'தினமலர்' நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி.


மத்திய அரசு, அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது, தமிழக பத்திரிகை துறைக்கு கிடைத்த மாபெரும் கவுரவம். பத்மஸ்ரீ விருது பெறும் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு, ஹிந்து முன்னணி மனமுவந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.


தெய்வீகபக்தி, தேசிய கண்ணோட்டத்தில் தொடர்ந்து பணியாற்றிட இறைவன், அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் வழங்கிட பிரார்த்திக்கிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement