கொத்தடிமைகள் போல் ஒப்பந்த பணியாளர்கள்
ஒப்பந்த பணியாளர்கள் என்றாலே, அவர்களை கொத்தடிமைகள் போல், அரசு நடத்துவது கண்டனத்துக்கு உரியது. 50 சதவீதம் பேர் பெண்கள், கைக்குழந்தைகளுடன், கருவுற்ற நிலையிலும், இவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று பணிபுரிய அவதிப்படும் நிலை உள்ளது இவர்களுக்கு பணியிட மாற்றம் வழங்க கூட மறுப்பது, மனித நேயமற்ற செயலாகும்.
இவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான நிதியில் பெரும் பகுதியை மத்திய அரசு வழங்குகிறது. ஆண்டுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கவும் நிதி வழங்குகிறது. அதை பெற்றுக் கொள்ளும் தமிழக அரசு, ஊதிய உயர்வு வழங்க மறுப்பது நியாயமல்ல.
ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்களுக்கு,பணி நிரந்தரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்ததை நிறைவேற்ற, தி.மு.க., அரசு தவறி விட்டது. அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.