சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க டிரம்ப் முயற்சி; வீராப்பு காட்டிய கொலம்பியா பணிந்தது!
வாஷிங்டன்: சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்காவின் திட்டத்தை ஏற்க மறுத்த கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணிகள் வர தடை என கெடுபிடி உத்தரவுகளை அதிபர் டிரம்ப் பிறப்பித்தார்; பதிலுக்கு முதலில் வீராப்பு காட்டிய கொலம்பியா, பின்னர் பணிந்தது. இதையடுத்து தடை, வரி விதிப்பு உத்தரவுகளை டிரம்ப் ரத்து செய்தார்.
@1brஅமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் பதவியேற்றார்; தொடர்ந்து அதிரடியான பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்த உத்தரவிட்டார். இதன் படி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானம் மூலம் அனுப்பி வைத்தனர்.
இதில், அமெரிக்க விமானம் தரையிறங்குவதற்கு மெக்சிகோ அனுமதி மறுத்தது. அதேபோல், அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட விமானங்களை தரையிறங்க கொலம்பியாவும் அனுமதிக்கவில்லை. இதற்கு பழிவாங்கல் நடவடிக்கையாக, அந்த நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உயர்த்தினார்.
இந்த வரி விதிப்பு, ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும்; கொலம்பியா நாட்டு அதிகாரிகளுக்கான விசா ரத்து செய்யப்படுகிறது; கொலம்பியர்கள் அமெரிக்காவுக்கு பயணிக்க தடை விதிக்கப்படுகிறது என்றும் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த அறிவிப்புகளை தென் அமெரிக்கா நாடான கொலம்பியா முதலில் பொருட்படுத்தவில்லை. கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, அமெரிக்கா இறக்குமதிகள் மீதான வரிகளை 25% உயர்த்துமாறு உத்தரவிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: அமெரிக்காவில் எங்கள் நாட்டு பொருட்களுக்கு வரி விதிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நானும் அதையே செய்கிறேன், என்று கூறினார்.
விசா ரத்து, பயணத்தடை போன்ற அறிவிப்புகள் பற்றி கொலம்பியா அதிபர் கூறுகையில், 'நான் ஒன்றும் அமெரிக்கா வர விரும்பவில்லை. அது எனக்கு போர் அடிக்கிறது. நானோ, மற்ற கொலம்பியா நாட்டவரோ, நீங்கள் நினைப்பது போல் மட்டமானவர்கள் அல்ல' என்றும் பதிலடி கொடுத்துள்ளார். கொலம்பியா திருப்பி அனுப்பும் விமானங்களை ஏற்க மறுத்ததற்கு பதிலடியாக, அமெரிக்க தூதரகம் விசா சேவையை நிறுத்தியது.
இதையடுத்து, அமெரிக்க அதிபரும், வெளியுறவு அமைச்சரும், கொலம்பியாவுக்கு எதிரான தடைகளை கண்டிப்புடன் அமல் செய்ய உத்தரவிட்டனர். நிலைமை மோசமாவதை கண்டு உஷாரான கொலம்பியா அரசு, அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.
சட்டவிரோதமாக சென்றவர்களை திருப்பி அழைத்து வரும் விமானங்களை ஏற்பதாக கொலம்பியா அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து அந்நாடு மீது விதிக்கப்பட்ட தடைகள், வரி விதிப்பு ஆகியவற்றை ரத்து செய்ய டிரம்ப் உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (5)
Kasimani Baskaran - Singapore,இந்தியா
27 ஜன,2025 - 15:35 Report Abuse
அதானால் செல்வச்செழிப்பு மிக்க விவசாயத்தால் பெரும் பொருளீட்டும் மாநிலங்கள் வேலைக்கு ஆள் கிடைக்காமல் திண்டாடும். விவசாயம் நொடித்துப்போகக்கூட வாய்ப்பு இருக்கிறது. சிக்கலான பிரச்சினை.
0
0
Laddoo - Bangalorw,இந்தியா
27 ஜன,2025 - 18:37Report Abuse
90% விவசாய பண்ணைகளை நிர்வகிப்பது யூதர்கள் கூட்டுக் குடும்பம். நவீன விஞ்ஞான முறைகளை மேற்கொண்டு அவர்கள் விவசாயம் செய்கிறார்கள். ஆனாலும் நீங்கள் கூறிய கருத்து சரிதான். பெர்மனெண்ட் சிடிஸின்ஷிப் தவறான கொள்கை என்பது உலகம் பூரா உணர படுக் கொண்டிருக்கிறது. காண்ட்ராக்ட் லேபெர் பெஸ்ட் என்று நினைக்கிறார்கள்.
0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
27 ஜன,2025 - 14:29 Report Abuse
விட்டால் கள்ளக்குடியேறிகளை விமானமேற்றி அந்தந்த நாடுகள் மீது பாராஷூட் மூலம் வீசிவிடுவார் போல இருக்கிறது. வங்கதேசத்தவர்களையும் நாம் அப்படி விரட்டவில்லை என்றால் இன்னும் ஒரு மாநிலத்தை வங்கதேசத்திடம் இழக்கவேண்டிவரும்
0
0
Reply
GMM - KA,இந்தியா
27 ஜன,2025 - 12:14 Report Abuse
சட்ட விரோத குடியேறிகள் கொலம்பியா, மெக்ஸிகோ மக்கள் என்றால், அவர்களை அமெரிக்கா வெளியேற்றியது சரியே. சீனா என்றால் சிறையில் வைத்து சித்திரத்தை செய்யும். அமெரிக்கா ஜனநாய நாடு என்பதால், தானே விமானம் மூலம் அனுப்பி, மனிதாபிமான முறையில் செயல்படுகிறது. கொலம்பியா, மெக்ஸிகோ குழப்பம் ஏற்படுத்த கூடாது. உலகம் சட்ட விரோத குடியேற்றத்தை குற்ற செயல் அதிகரிப்பதால், இனி ஏற்காது.
0
0
Reply
Karthik - Dindigul,இந்தியா
27 ஜன,2025 - 10:34 Report Abuse
உங்களுக்கு அமெரிக்கா போர் அடித்ததால் போகாததுபோல உங்கள் நாட்டினரையும் திருட்டுத்தனமாக அமெரிக்கா செல்லவேண்டாம் என சொல்லுங்கள்.
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement