சிறுமியர்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற சிறுவர்கள்; மூவருக்கு 'காப்பு'

24

சென்னை; பெரம்பூரைச் சேர்ந்த 12 வயது சிறுமி, அதே பகுதி தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு பயில்கிறார். கடந்த 24ம் தேதி மாலை, தன் தோழியின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதாக, பெற்றோரிடம் கூறி சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர், திரு.வி.க., நகர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். சிறுமி பயன்படுத்தும் மொபைல் போன் டவர் வாயிலாக போலீசார் தேடியபோது, பெரம்பூர் வீனஸ் சந்தை பகுதியில் சிறுமி இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு, 12 வயது சிறுமி, 16 வயது காதலனுடன் தனிமையில் இருந்துள்ளார்.

அதேபோல், பெரம்பூரைச் சேர்ந்த 14 வயது மற்றொரு சிறுமி, அவரது காதலன் கரிமுல்லா, 21, உடனும், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அகரம் பகுதியைச் சேர்ந்த அபிஷேக், 19, என்பவருடனும் இருந்துள்ளனர்.

மூன்று ஜோடிகளும் தனிமையில் இருப்பதை பார்த்த போலீசார், அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். சம்பந்தப்பட்ட சிறுவர் - சிறுமியரது பெற்றோருக்கும் தகவல் அளித்தனர்.

மூன்று சிறுமியரும், மருத்துவ பரிசோதனைக்கு பின், முத்தையால்பேட்டையில் உள்ள அரசு மகளிர் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டனர். அங்கு, குழந்தைகள் நல அலுவலர்கள் வாயிலாக கவுன்சிலிங் தரப்படுகிறது.


'போக்சோ' பிரிவில் வழக்கு பதிந்து, சிறுவன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,இரு வாலிபர்களை சிறையில் அடைத்தனர். சிறுவனை, அரசு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினர்.

ஏற்கனவே வழக்குகள்



கரிமுல்லா மீது வழிப்பறி, அடிதடி உட்பட 11 வழக்குகளும், அபிஷேக் மீது திருட்டு வழக்கு ஒன்றும், 16 வயது சிறுவன் மீது திருட்டு உள்ளிட்ட ஆறு வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement