ஆறுதல் கொடுக்கும் தங்கம் விலை; இன்று பவுனுக்கு ரூ.120 குறைவு
சென்னை: தங்கம் விலை தொடர் உயர்வால் ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதனால், புதிய உச்சமாக ரூ.60 ஆயிரத்தை கடந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்நிலையில், இன்று (ஜன.,27) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 60,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து, ரூ.7,540க்கு விற்பனை ஆகிறது
கடைசி 5 நாட்கள் தங்கம் விலை நிலவரம்;
22/01/2025- ரூ.60,200
23/01/2025- ரூ.60,200
24/01/2025 - ரூ.60,440
25/01/2025 - ரூ.60,440
27/01/2025 - ரூ.60,320
வாசகர் கருத்து (1)
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
27 ஜன,2025 - 11:02 Report Abuse
தங்கம் விலை இந்தியாவில் குறைந்தால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் குறைகிறது என்று பொருள் ..... மக்கள் மகிழலாம் ..... ஆனால் இந்தியப் பொருளாதாரம் இறங்குமுகம் .....
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement