பொது இடங்களில் கட்சி கொடிக்கம்பம்; 12 வாரத்தில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு!

20


மதுரை: 'பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்' என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

மதுரை விளாங்குடி, பழங்காநத்தம் ரவுண்டானா அருகே அ.தி.மு.க.,கொடி கம்பம் நட அனுமதி கோரி, ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜன.,27) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

* பட்டா நிலத்தில் கொடிக்கம்பங்களை நிறுவலாம். அதற்குரிய விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்.

* பொது இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்.


* தவறினால் அரசே அகற்றி விட்டு அதற்குரிய செலவு தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


* இதையடுத்து, கொடி கம்பம் நட அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Advertisement