'டேய் பைத்தியம்'; நெட்டிசனால் கடுப்பான அஸ்வின்
சென்னை: சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த நெட்டிசனால் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் கடுப்பாகி திட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின், நடிகர் அஜித் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 12 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில், அஜித் மற்றும் அஸ்வினுக்கு நடிகரும், இயக்குநருமான தனுஷ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியிருந்தார். அதற்கு அஸ்வின் 'நன்றி' என பதிலளித்திருந்தார்.
அஸ்வினின் இந்தப் பதிவுக்கு, நெட்டிசன் ஒருவர்,' நன்றியை முதலில் நீங்கள் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு தான் தெரிவிக்க வேண்டும்', என்று ஹிந்தியில் குறிப்பிடிருந்தார்.
இதனால், கடுப்பான அஸ்வின், 'டேய் பைத்தியம்' எனக் காட்டமாக பதிலளித்துள்ளார். இதன்மூலம், இந்திய அணியில் அஸ்வினுக்கு மோதல் போக்கு இருந்தது உறுதியாகியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.