வெறி வரணும்; உன் மூஞ்ச பாத்தா வர மாதிரி தெரியலையே; மேடையிலேயே தொண்டரை கலாய்த்த அன்புமணி
சேலம்: சேலத்தில் நடந்த பா.ம.க கட்சி கூட்டத்தில், "வெறி வரணும்..உன் மூஞ்ச பார்த்தா வெறி வர மாதிரி தெரியலயே" என கட்சி தொண்டரை அன்புமணி கடிந்து கொண்டார்.
@1br சேலத்தில் நடந்த பா.ம.க., கட்சி கூட்டத்தில் அக்கட்சி தலைவர் அன்புமணி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன் வட தமிழகம் எப்படி இருந்தது என்று எல்லாம் உங்களுக்கு தெரியுமா? தினமும் பிரச்னை, கலவரம் நடந்து கொண்டே இருக்கும். ராமதாஸ் ஒருவரால் வட தமிழகத்தில் 30 ஆண்டு காலமாக அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நக்சலைட் இல்லாமல் போனதற்கு காரணம் ராமதாஸ்.
இதே மாவட்டத்தில் தனியாக நின்று 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது கூட்டணியில் இருந்தும் 2 தொகுதிகளைத்தான் வென்றுள்ளோம்.
அப்படி என்றால் நாம் வளர்ந்திருக்கிறோமா? நமக்கு பலம் இருக்கிறது, இளைஞர் சக்தி இருக்கிறது, வழிகாட்ட ராமதாஸ் இருக்கிறார். ஆனால் அன்றைக்கு இருந்த உழைப்பு நம்மிடம் இல்லை. தனியாகப் போட்டியிட்டால் கூட சேலம் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பா.ம.க.,வுக்கு அதிக எம்.எல்.ஏக்களை கொடுத்துள்ள மாவட்டம் சேலம் மாவட்டம்.
எவ்வளவோ செய்திகள் இருக்கிறது இதை நீங்கள் மக்களிடம் சொல்லலாம்.
என்ன அண்ணாமலை அப்படியே பாக்குற.. உன்னையும் தான் சேர்த்துச் சொல்றேன்.. உன் தொகுதியில் வாங்குனியே ஓட்டு.. 52 ஆயிரம் ஓட்டுக்கள் வாங்கிய தொகுதி அது. எல்லாத்திற்கும் தான் சொல்கிறேன். இன்னும் 10 மாதங்கள் தான் இருக்கின்றன. 10 மாதத்தில் களத்தில் இறங்குங்கள். அந்த வெறி வரவேண்டும். கோபம் வரவேண்டும். பல்லை கடித்துக் கொண்டு இறங்குங்கள். வருமா, என்ன உன் மூஞ்ச பாத்தா எனக்கு வெறி வர மாதிரி தெரியலயே, இறங்குங்க, போங்க ரெண்டுல ஒன்னு பாத்துக்கிடலாம். என்ன ராமகிருஷ்ணா கோபம் வந்திருச்சா? இவ்வாறு அன்புமணி பேசினார்.
வாசகர் கருத்து (14)
அப்பாவி - ,
29 ஜன,2025 - 06:54 Report Abuse
மேடையிலே வேற யாரையும் தொண்டரையும் உக்கார உட மாட்டாங்க. இவிங்களே சாப்புடுவாங்க. தொண்டருக்கு வெறி வரணுமாம். கடிச்சிடப் போறாங்கப்பு.
0
0
Reply
Raa - Chennai,இந்தியா
28 ஜன,2025 - 21:52 Report Abuse
அண்ணே எந்த கொரங்கு பொம்மை என்ன விலை? அது முகம் பார்க்கும் கண்ணாடி.... உன் மூஞ்சிதான் பார்க்கிறாய்.
0
0
Reply
V வைகுண்டேஸ்வரன் - Chennai,இந்தியா
28 ஜன,2025 - 21:02 Report Abuse
பாஜக ஆட்சிக்கு பூஜ்யத்துக்கும் கீழே மார்க் போட்டு விட்டு அதே பாஜக வுடன் கூட்டணி வைத்து 2024 தேர்தலில் மனைவியை வேட்பாளர் ஆக்கினார். அப்பவே இவரது சாதி தொண்டர்கள் வெறி கொண்டு விட்டார்கள்.
0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
28 ஜன,2025 - 19:59 Report Abuse
சாதி வெறியை தூண்டிவிட்டு ஒட்டுவேட்டையாடி துட்டு சம்பாரிக்கணும்னு அப்பனும் மவனும் போட்ட திட்டம் தொண்டர்களுக்கு புரிஞ்சு போச்சு. எவ்வளவு நாளைக்கு தான் சுட்ட ஒரே கோட்டா வடையை நம்பறது? இனிமே புதுசு புதுசா தினமும் வடை சுடுங்க. அப்பத்தான் நம்புவாங்க. முடியலைன்னா சீமான்கிட்ட கத்துக்கங்க . அவர் எப்படி ஆமை ஓட்ட திருப்பி போட்டு பரிசல் ஓட்டினார் . இட்லிக்குள்ள ஆமைக்கறியை வைச்சு கெட்டிச்சட்டினியோட மதிவதனி சீமானுக்கு ஊட்டிவிட்டாங்க. பிரபாகரன் நெஞ்சுலேயே சீமான் தூங்கினாரு. இதெல்லாம் சீமான் தொண்டர்கள் நம்பறாங்க. அதனால் நீங்க இன்னும் பெரிசா அள்ளிவிடுங்க. காசா பணமா. நம்பறதுக்கு ஒரு கூட்டம் இங்க இருக்கு.
0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
28 ஜன,2025 - 18:59 Report Abuse
எந்த கட்சிதான் உசுப்பி விட்டு அதில் குளிர் காய்வதில்லை ?? இந்த அருவருப்பான அரசியலை அனைத்துக்கட்சிகளும் - பாஜக உட்பட - செய்து வருகின்றன ....
0
0
Reply
அப்பாவி - ,
28 ஜன,2025 - 18:50 Report Abuse
போதும்டாப்பா... ரொம்ப நாளைக்கு முன் வெறி வந்து சாலையோர மரங்களை வெட்டிச் சாய்த்தது இன்னும் கண்ணுலேயே நிக்கிது.
0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
28 ஜன,2025 - 18:37 Report Abuse
வெறி வந்தா பச்சை மரங்களை வெட்டி நடுரோடில் போடத்தான் பாமக தொண்டனால் முடியும்.
0
0
Reply
Oru Indiyan - Chennai,இந்தியா
28 ஜன,2025 - 18:34 Report Abuse
உங்கள் முகத்திலேயே வெறி இல்லையே. உங்கள் முகள் பால் வடியும் முகம். சீமான் முகத்தி வருகிற வெறி வந்தால் வெற்றி.
0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
28 ஜன,2025 - 18:32 Report Abuse
ஆமாம் பொட்டி நீங்க வாங்குவதற்கு வெறி அவனுக்கு வரணும்
0
0
Reply
கந்தண் - ,
28 ஜன,2025 - 18:17 Report Abuse
சும்மாவே எத்தன நாள் செய்வான். (அது அந்த காலம், கட்சி ஆர்வம் !இப்ப காசு குடு) ஏதாவது கவனிக்கனும் இல்லாட்டி பூஜ்யம் தான்.
0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement