யமுனை நதியில் நச்சு? கெஜ்ரிவாலுக்கு சிக்கல்!

11

புதுடில்லி : யமுனை நதியில், ஹரியானா மாநில பா.ஜ., அரசு நச்சு கலப்பதாக குற்றஞ்சாட்டிய விவகாரம் தொடர்பாக, டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவாலுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


யமுனை நதியில், ஹரியானா மாநில பா.ஜ., அரசு நச்சு கலப்பதாக, கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி இருந்தார். இதுகுறித்து அவர் மீது பா.ஜ., தேர்தல் கமிஷனில் புகார் அளித்தது. இதற்கு, உரிய ஆதாரங்களுடன் தன் பதிலை அளிக்குமாறு தேர்தல் கமிஷன் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் கமிஷன் அனுப்பிய நோட்டீஸ் விபரம்:



இத்தகைய குற்றச்சாட்டுகள் அண்டை மாநிலங்களில் வசிப்போருக்கு இடையே பகைமையை உருவாக்கும். சட்டம் - ஒழுங்கு அச்சுறுத்தல் ஏற்படக் காரணமாக அமையும். எனவே, புகாருக்கு உண்டான ஆதாரங்களுடன், இன்றிரவு 8:00 மணிக்குள் தன் பதிலை கெஜ்ரிவால் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement