அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் இந்து மகா சபையினர் கைது

சேலம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை பெயரை மாற்றும் முயற்சி நடப்பதாக கூறி, சேலம் மாவட்ட அகில பாரத இந்து மகா சபை சார்பில், கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

சேலம் டவுன் போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் நேற்று காலை கோட்டையில், மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்களை கைது செய்த போலீசார், தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். உடல் நல பிரச்னை, வயது முதிர்வால், இரவில், 10 பேரை விடுவித்தனர். ஜெயபிரகாஷ் உள்பட, 14 பேரை கைது செய்தனர்

Advertisement