ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 130வது பிறந்த நாள் விழா; மாநில தலைவர் ரவி அழைப்பு

திண்டிவனம்; திண்டிவனம் அருகே ஓமந்தூரார் மணிமண்டபத்தில், முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 130வது பிறந்த நாள் விழா நாளை (1ம் தேதி) நடக்கிறது.

ஓ.பி.ஆரின் 130 வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு ரெட்டி நலசங்க மாநில தலைவர் ரவி தலைமையில் நாளை(1 ம் தேதி) காலை 9.00 மணிக்கு ஓமந்தூரார் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகின்றது.

தொடர்ந்து, 9.30 மணிக்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு திடலில் உள்ள திவான் பகதூர் சுப்புராயலு ரெட்டியார் அரங்கத்தில், சங்க கொடியேற்று நிகழ்ச்சி நடக்கின்றது. தொடர்ந்து, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சங்க கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.

நிர்வாகிகள் சேகர், ரவிச்சந்திரன், தனலட்சுமி சீனுவாசன், அருணாசலம், இளங்கோவன், சுப்பாராஜ், ராமசந்திரன், ராஜாபூர்ணசந்திரன், அருண்குமார், பேராசிரியர் ராமசீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

அனைத்து மாவட்ட தலைவர்கள், செயலர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், சங்கத்தினரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என மாநில தலைவர் ரவி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement