த.வெ.க.,வில் இணைந்தனர் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார்!
சென்னை: சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடந்த விழாவில், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோர் கட்சியில் இணைந்தனர். ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
நடிகர் விஜய்யின் த.வெ.க., தொடங்கி ஓராண்டை எட்ட உள்ளது. கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு நிர்வாகிகளை நிரப்புவதில் விஜய் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன், விஜய்யை அவரது பனையூர் அலுவலகத்தில் லாட்டரி மார்ட்டின் மருமகனும், வி.சி.க., முன்னாள் நிர்வாகியுமான ஆதவ் அர்ஜூனா சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் மூலம் அவர் தவெகவில் இணைய இருப்பதாக பேச்சுக்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், இன்று (ஜன.,31) சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடந்த விழாவில், ஆதவ் அர்ஜூனா இணைந்தார். அதேபோல், அ.தி.மு.க., ஐ.டி., பிரிவு இணைச் செயலாளர் நிர்மல் குமாரும் விஜய் முன்னிலையில் த.வெ.க.,வில் இணைந்தார். ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பதவி
வழங்கப்பட்டு உள்ளது. நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
முன்னதாக ஆட்சியில் சம பங்கு என விஜய் பேசியதை விசிகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த போது ஆதவ் அர்ஜூனா வரவேற்றார். தொடர்ந்து கட்சித்தலைமையின் எண்ணத்துக்கு மாறாக அவர் பேசிய கருத்துக்கள் சர்சையை கிளப்பியது. தி.மு.க., மற்றும் விசிக இடையே மோதல் சூழல் உருவானதை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் அக்கட்சியில் இருந்தும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (13)
Palanisamy Sekar - Jurong-West,இந்தியா
31 ஜன,2025 - 16:44 Report Abuse
போகிற போக்கை பார்த்தால் இப்போது உள்ள பொ செயலாளருக்கு கல்தா கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நிர்மல் குமார் எல்லாம் ஒரு ஆளுன்னு சேர்த்து கொண்டது அசிங்கம். உண்மையான தொண்டர்களுக்கு வழக்கம்போல திமுகவை போல பெப்பே தான். ஆதவ் அர்ஜுனன் ஓகேதான். என்னமோ போகிறபோக்கை பார்த்தால் கட்சியின் செல்வாக்கு கூடுவதற்கு சந்தர்ப்பமே கிடையாது. இப்படி ஓட்டுக்களை பிரிப்பது கட்சியிலே கூட சலசலப்பை உண்டாக்கும். பத்தோடு பதினொன்று. அதோடு விஜய்யும் ஒன்றாக முடியும்.
0
0
Reply
Anand - chennai,இந்தியா
31 ஜன,2025 - 16:31 Report Abuse
ஒரு கேவலமான பட்டப்பெயரோட ஒருத்தன் வாத்து நடை நடப்பானே அவன் இனி அவ்வளவுதானா?
0
0
Reply
Subburamu Krishnasamy - ,
31 ஜன,2025 - 15:55 Report Abuse
TVK is going to be the worst political outfits. Joseph Vijay is not a quality citizen. Political prostitutes are joining with Vijay political outfits. one more party to cheat the Tamizhagam voters, prone for easy cheating
0
0
Reply
Rengaraj - Madurai,இந்தியா
31 ஜன,2025 - 15:14 Report Abuse
காசு கொடுத்து தங்களது கட்சி தொண்டர்களை பொது கூட்டத்துக்கு கூட்டறாங்க . காசு கொடுத்து அடுத்த கட்சிலேந்து தொண்டர்களை கூட்டறாங்க . காசு கொடுத்து அடுத்த கட்சி தலைவர்களை சேர்க்கறாங்க. ஒரு சிலர் காசு கொடுத்து அடுத்த கட்சியில் சேர்றாங்க . தலைவர்களுக்கு நிலையான கொள்கை இல்லை. தொண்டர்களுக்கும் நிலையான தலைவர் இல்லை. சீசனுக்கு ஒரு கட்சி, சீசனுக்கு ஒரு தலைவர் , சீசனுக்கு ஒரு கொள்கை ,. தீபாவளி, பொங்கல் சீசன் வியாபாரம் போல அரசியல் கட்சி நடத்தறாங்க. . போட்ட காசை எடுக்கணும் . அதுக்கு ஒரு சீசன் தேவை . தேர்தல் ஓர் சீசன் . ஒரு சிலர் சீசனுக்கு ஒரு வருஷம் முன்னாலேயே கம்மியான விலைக்கு சரக்கை வாங்கிப்போட்டு, ஆட்களை வேலைக்கு அமர்த்தி அதிக விலைக்கு வியாபாரம் பண்ணுவதற்கு தயாரா இருப்பாங்க. வியாபாரத்திலே நட்டம் வந்தாலும் முதலுக்கு மோசம் இல்லைன்னுட்டு அடுத்த சீசனுக்கு ரெடியாயிடுவாங்க. அப்படியே நட்டம் வந்தாலும் அரசாங்கத்துக்கு வரி எதுவும் கட்ட வேண்டம். நட்ட கணக்கை காட்டிட்டு போய்க்கிட்டே இருக்கலாம். மொத்தத்தில் லாபம் தான். இப்போ இங்க நடக்கிறதை கூட்டி கழிச்சு பார்த்தா அப்படிதான் தெரியுது
0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
31 ஜன,2025 - 15:13 Report Abuse
இன்னும் யார் யாரெல்லாம் உயிர்த்தெழுந்து வந்து த வே க ல இணைய போறாங்களோ தெரியல
0
0
Reply
Rengaraj - Madurai,இந்தியா
31 ஜன,2025 - 14:53 Report Abuse
திருமா மனசுக்குள் இப்படி பாடுவார் "- "" நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன் ""
0
0
Reply
Thirumal Kumaresan - singapore,இந்தியா
31 ஜன,2025 - 14:43 Report Abuse
அரசியல் வியாபாரிகள்
0
0
Reply
Uuu - ,இந்தியா
31 ஜன,2025 - 14:42 Report Abuse
நோ use
0
0
Reply
Shekar - ,
31 ஜன,2025 - 14:34 Report Abuse
அப்போ இனி புஸ்ஸி புஸ்தானா, வேற மடம் தேடனுமா?
0
0
Reply
Mani Iyer - Dubai,இந்தியா
31 ஜன,2025 - 14:29 Report Abuse
நிர்மல் குமார் ஒரு ஸ்லீப்பர் செல்
0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement