கால்நடை குடிநீர் தொட்டி சேதம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்டது பாப்பரம்பாக்கம் ஊராட்சி. இங்கிருந்து, வெள்ளேரிதாங்கல் செல்லும் சாலையோரம், அரசு பள்ளி அருகே, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 2020 - 21ம் ஆண்டு, நிதி ஒதுக்கீட்டின்கீழ், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
இந்த கால்நடை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது, சேதமடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.
மேலும், குழாய் வால்வு பகுதி பழுதடைந்தும் குடிநீர் வீணாகி வருகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் ஆய்வு செய்து, சேதமடைந்த கால்நடை குடிநீர் தொட்டியை சீரமைத்து, தண்ணீர் வீணாவதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓசூரில் ஈஷா சார்பில் 1 கோடி மரக்கன்றுகள்நடுவது குறித்த கலந்தாலோசனை கூட்டம் ஓசூரில் ஈஷா சார்பில் 1 கோடி மரக்கன்றுகள்நடுவது குறித்த கலந்தாலோசனை கூட்டம்
-
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரிக்கை
-
அரசு மகளிர்கலைக்கல்லுாரியில் மகளிர் தினவிழா
-
அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம்
-
கருப்பு கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பு5 வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்
-
பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்குஉடனடியாக தண்ணீர் திறக்க வேண்டுகோள்
Advertisement
Advertisement