உலக அரங்கில் இந்திய சுற்றுலாத்துறை சாதிக்க வாய்ப்பு மத்திய பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து
நாமக்கல்: லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-26ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை, நேற்று தாக்கல் செய்தார். அதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
ஆர்.வேலுசாமி, மாநில தலைவர், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம்: விவசா-யிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யாமல், கிசான் கிரெடிட் கார்டு மூலம் கடன் உச்சவரம்பை அதிகப்படுத்தி, மேலும் விவசாயி-களை கடன் சுமைக்கு ஆளாக்குகின்றனர். உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை படிப்படி-யாக குறைத்ததால், நாட்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது.
ஆர்.பிரணவகுமார், ஒருங்கிணைப்பாளர், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் பட்டதாரிகள் கூட்டமைப்பு: நாடு முழுவதும், 50 சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தவது, மருத்துவ சுற்றுலாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, அனைத்து சுற்றுலா தலங்க-ளிலும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவது, உள்நாட்டு சுற்றுலா மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் வகையிலும், உலக அரங்கில் இந்திய சுற்றுலாத்துறை சாதிக்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
கே.சிங்காரம், வெண்ணந்துார் விசைத்தறி சங்க முன்னாள் பொருளாளர்: விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு மூலம் கடன், 3 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்-ளது. மேலும், விவசாயிகளுக்கான கடன் தொகையில் மானியம், 3,000ல் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தி உள்ளது பாராட்டத்தக்-கது. நெசவு தொழிலுக்கு எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
பெ. சரவணன், இயற்கை விவசாயி, ராசிபுரம்: மூத்த குடிமக்-களின் சேமிப்பு மீது வரி விலக்கு, 50,000 ரூபாயில் இருந்து, ஒரு லட்சமாக உயர்த்தியிருப்பது வரவேற்புக்குரியது. கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும், 'ஜல்ஜீவன்' திட்-டத்தை, 2028 வரை நீட்டிப்பு செய்துள்ளதால் கிராம மக்கள் பயன்பெறுவர். மேலும், விவசாயத்திற்கு இந்த பட்ஜெட்டில் எப்-போதும் இல்லாத அளவிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
அ.சுகந்தி, கல்வியாளர், ஓய்வுபெற்ற வங்கி மேலாளர், நாமகி-ரிப்பேட்டை: தாய்மொழியில் டிஜிட்டல் பாடங்களை கொண்டு வர நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரியது. மருத்துவ படிப்புக்கு அடுத்த, 5 ஆண்டுகளில், 75,000 கூடுதல் இடங்களை அகில இந்திய அளவில் ஏற்படுத்த உள்ளதாக வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்கதக்கது. அரசு பள்ளி மாணவர்கள் திறனை மேம்படுத்த, 50,000 ஆய்வகங்கள் அமைக்கப்படும் என தெரி-வித்துள்ளனர். இதை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.
வி.டி. கருணாநிதி, தலைமை ஆலோசகர், தமிழ்நாடு விசைத்-தறி சங்க கூட்டமைப்பு, பள்ளிப்பாளையம்: மின்சார வாகனம், மொபைல் பேட்டரி உற்பத்திக்கு வரி சலுகை, புதிய ஏற்றுமதி ஊக்குவிப்பு வாரியம் அமைக்கப்படும். பதிவு செய்யப்பட்ட சிறு தொழில் துறையினருக்கு, 5 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும். சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம், 20 கோடி ரூபா-யாக அதிகரிப்பு போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளன. இது, தொழில்களுக்கு ஏற்றம் தரும் பட்ஜெட்டாக உள்ளது.
மேலும்
-
பா.ம.க., துண்டு அணிந்து மாணவர்கள் நடனம்: பள்ளி தலைமையாசிரியர் டிரான்ஸ்பர்!
-
இன்று மகளிர் தினம்; பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை கையாண்ட சாதனை மகளிர்!
-
அ.தி.மு.க.,வை அவர் குறிப்பிட்டாரா: அண்ணாமலை பேச்சு குறித்த கேள்விக்கு இ.பி.எஸ்., பதில்
-
கனடா விடுதியில் துப்பாக்கிச்சூடு; 12 பேர் படுகாயம்
-
புலித்தோல் பார்சல் வந்ததாக மிரட்டல்: டிஜிட்டல் அரெஸ்ட் செய்து ரூ.4.67 கோடி பறித்த கும்பல் கைது!
-
விபத்தை தடுக்க தெருநாய்களுக்கு ஒளிரும் பட்டை; பிராணிகள் நல வாரிய கூட்டத்தில் முடிவு