'ஒரு பிடி மண்ணைக்கூட விட்டுத்தர மாட்டோம்'
கடலுார் : கடலுார் அருகே மலையடிக்குப்பத்தில் விவசாய குடும்பங்களில் தரிசு நிலத்தை கையகப்படுத்துவதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பேசியதாவது:
கடலுார் அருகே மலையடிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 155 விவசாயக் குடும்பங்கள் 165 ஏக்கர் தரிசு நிலங்களை மேம்படுத்தி குடியிருந்தும், முந்திரி உள்ளிட்ட சாகுபடிகளை 150 ஆண்டுகளாக செய்கிறார்கள்.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வந்த சட்டத்தின் அடிப்படையில் கிராம மக்களுக்கு நோட்டீஸ் கொடுத்து 15 நாட்களுக்குள் சரியான காரணம் இல்லாத பட்சத்தில் வெளியேற்ற வேண்டும்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்த பிறகு சம்பந்தப்பட்ட விவசாயிகள் கொடுத்த விளக்கத்தின் மீது ஒரு உத்தரவு போடாமல் நடவடிக்கை எடுக்க முடியாது. 150 ஆண்டு காலமாக அனுபவித்து வந்த இந்த இடத்தை பட்டா போட்டு கொடுப்பதில் என்ன பிரச்னை உள்ளது. தமிழகத்தில் தனியார் சுயநிதி பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளுக்கு அரசு புறம்போக்கு இடங்களை பட்டா போட்டு அரசு கொடுத்துள்ளது. மக்களின் வாழ்வாதார பிரச்னைக்காக ஒரு பிடி மண்ணைக் கூட விட்டு தர மாட்டோம். இதற்காக மாவட்டம் முழுவதும் வலுவான போராட்டம் பா.ஜ., சார்பில் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
முகலாயர் காலத்து தங்கப்புதையல் இருப்பதாக வதந்தி: வயல்களை தோண்டும் ம.பி., கிராமவாசிகள்!
-
20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதி கைது; உ.பி.,யில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்
-
அ.தி.மு.க.,வைப் பற்றி நான் பேசவில்லை: அண்ணாமலை பதில்
-
வழக்கம் போல நாடகமாடுகிறதா தி.மு.க., அரசு; அண்ணாமலை கேள்வி
-
கட்டாய மதமாற்றம் செய்தால் மரண தண்டனை; ம.பி.,முதல்வர் அறிவிப்பு
-
மதுரை கோட்டத்தில் மகளிர் விடியல் பயண திட்டத்தில் 80 கோடி பேர் பயணம்