ஞானமணி தொழில்நுட்ப கல்லுாரிஐ.டி., நிறுவனங்களுடன் ஒப்பந்தம்


ஞானமணி தொழில்நுட்ப கல்லுாரிஐ.டி., நிறுவனங்களுடன் ஒப்பந்தம்


ராசிபுரம்:நாமக்கல், பாச்சல் ஏ.கே.சமுத்திரத்தில் உள்ள ஞானமணி தொழில்நுட்ப கல்லுாரியில், ஐ.டி., நிறுவனங்களான பிரிசிஸன் இன்போமேட்டிக் பிரைவேட் லிமிடெட், சேட் கனெக்சன்ஸ், டேட்டாரிவியல் ஐ.டி., கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது. தாளாளர் மாலாலீனா குத்துவிளக்கேற்றி, விழாவை துவக்கி வைத்தார். கணினி துறை தலைவர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.
தலைவர் அரங்கண்ணல் தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலையை வழங்குபவர்களாக தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மாணவர்களின் மேம்பாட்டிற்காகவும், வளர்ச்சிக்காகவும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
கல்லுாரியின் முதன்மை நிர்வாக அதிகாரி பிரேம்குமார், முதல்வர் கண்ணன், கல்வி இயக்குனர் சஞ்சய் காந்தி, உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். செயற்கை நுண்ணறிவு ஆலோசகர் ரவிசந்திரன் பேசுகையில், ''இக்கல்லுாரியில் ட்ரோன் ஆராய்ச்சி மையம் துவங்கப்பட உள்ளது,'' என்றார். ஐ.டி., நிறுவன நிர்வாகிகள் சதீஸ்குமார், வேலப்பன், சந்திரன், ராஜகோபாலன், சக்திகுமரன் ஆகியோர் பல்வேறு கருத்துகளை மாணவர்களுக்கு கூறினர். கல்லுாரி தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் கோபிநாத் நன்றி கூறினார்.

Advertisement