எருமப்பட்டி யூனியனில் 15 நாளில்982.640 மெ.டன் நெல் கொள்முதல்
எருமப்பட்டி யூனியனில் 15 நாளில்982.640 மெ.டன் நெல் கொள்முதல்
எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியனில் ஆண்டுதோறும் விவசாயிகள், மூன்று போகம் நெல் நடவு செய்து வருகின்றனர்.
இந்த நெல் பட்டம் மாறாமல் இருப்பதற்காக, விவசாயிகள் ஒரே நேரத்தில் அறுவடை செய்வதால், வியாபாரிகள் ஒன்று சேர்ந்து நெல் விலையை குறைத்து வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக, இப்பகுதி விவசாயிகளின் நெல்லுக்கு போதிய விலை கிடைக்காத நிலை இருந்தது. இதனால், அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கடந்த, 10ல் கோணங்கிப்பட்டியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மையத்தில், 15 நாளில், 201 விவசாயிகளிடம் இருந்து, 982.640 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக நெல்லை விற்பனை செய்யலாம் என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
மேலும்
-
பாப்பாபட்டி கோயிலுக்கு புறப்பட்டது மாசிப்பெட்டி மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு
-
குப்பை தரம் பிரிக்கும் மையமான கழிப்பறை
-
24 மணி நேர தொடர் நாட்டியாஞ்சலி
-
குன்றத்து கோயில்களில் மகா சிவராத்திரி விழா
-
கோயில் விழாவில் 431வது ஆண்டாக நாடகம்
-
விக்டோரியா எட்வர்ட் மன்ற முறைகேடுகள்; முதல்வர் ஸ்டாலின் தீர்வு காண வலியுறுத்தல்