எக்ஸல் வணிகவியல் கல்லுாரியில்ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி


எக்ஸல் வணிகவியல் கல்லுாரியில்ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி


குமாரபாளையம்:நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஆங்கிலத்துறை சார்பில், இணைய வழி தேசிய அளவிலான ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.
கல்லுாரி முதல்வர் விமல் நிஷாந் தலைமை வகித்தார். புலன் முதன்மையர் மஞ்சுளா, ஆங்கிலத்துறை தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏழு நாள் வகுப்பில், முதல் நாள், கோவை கற்பகம் பல்கலை பேராசிரியை செல்வலட்சுமி, 2ம் நாள், சென்னை லயோலா கல்லுாரி உதவி பேராசிரியர் அமலா ஆரோக்கியராஜ், 3ம் நாள், சேலம் பெரியார் பல்கலை உதவி பேராசிரியர் பூபதி, 4வது நாள், கோவை பாரதியார் பல்கலை பத்மநாபன்.
ஐந்தாவது நாள், திருச்சி ஜமால் முகமது கல்லுாரி உதவி பேராசிரியர் முகமது உமர் பரூக், 6வது நாள், குஜராத் நவரச்சனா பல்கலையின் வணிக சட்டத்துறையை சேர்ந்த பிரதீயுமான்சிங் ராஜ், 7ம் நாள், சென்னை எஸ்.ஆர்.எம்., ஈஸ்வரி பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் நந்தகுமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இதில், 'புதுமை திறன் மேம்பாடு மற்றும் பிரதிபலிப்பு நடைமுறைகள் மூலம், ஆங்கில மொழி கற்பித்தலை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சீனிவாசன் நன்றி தெரிவித்தார்.

Advertisement