'2026ல் இ.பி.எஸ்., ஆட்சி வரும் என்றஒரே குறிக்கோளுடன் செயல்படணும்
'2026ல் இ.பி.எஸ்., ஆட்சி வரும் என்றஒரே குறிக்கோளுடன் செயல்படணும்
நாமக்கல்:அ.தி.மு.க., மாவட்ட மாணவர் அணி சார்பில், இளம் பேச்சாளர்கள் தேர்வு முகாம், நாமக்கல் கட்சி தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. மாநில மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இதில், முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான தங்கமணி பேசியதாவது:
நம் அ.தி.மு.க., கட்சி, தி.மு.க., கட்சி போல், கருணாநிதி; அவருக்கு பின்னால் ஸ்டாலின்; உதயநிதி என்று இல்லாமல், ஒரு ஜனநாயக கட்சியாக உள்ளது. இருபெரும் தலைவருக்கு பின்னால், உழைப்பு, விசுவாசம் காரணமாக, இ.பி.எஸ்., இந்த இடத்திற்கு எப்படி வந்திருக்கிறாரோ அதேபோல், சிறப்பாக செயல்பட்டால் அனைவராலும், அ.தி.மு.க.,வில் தலைமை பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது. வரும், 2026ல், இ.பி.எஸ்., தலைமையில் ஆட்சி வரும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்பட வேண்டும். இப்போது தேர்வு செய்யப்படும் பேச்சாளர்களுக்கு, ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் வாய்ப்பு கொடுத்து, எங்களைவிட சிறந்த பேச்சாளர்களாக உருவாக்குவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட மாணவரணி செயலாளர் பொன்னுசாமி, முன்னாள் அமைச்சர்கள் கருப்பணன், சரோஜா, எம்.எல்.ஏ., சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
குகைக்குள் 'டிரெக்கிங்': ஒடிசா அரசு அறிமுகம்
-
மாணவிக்கு டார்ச்சர் வாலிபர் மீது போக்சோ
-
ரூ.3.50 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டிய புரோக்கருக்கு வலை
-
நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு
-
அடுத்த ஆண்டு இ.பி.எஸ்., முதல்வர் அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு
-
மேட்டூர் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு