பிளாஸ்டிக் விழிப்புணர்வுதுண்டு பிரசுரம் வழங்கல்
பிளாஸ்டிக் விழிப்புணர்வுதுண்டு பிரசுரம் வழங்கல்
கரூர்:புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை சார்பில், பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் வளர்மதி தொடங்கி வைத்தார். பள்ளி அருகில் உள்ள வீடுகள், கடை வீதிகளில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை மாணவர்கள் வழங்கினர். மேலும், பொதுமக்கள், கடை உரிமையாளர்களுக்கு பிளாஸ்டிக்கினால் வரும் தீமை பற்றி எடுத்து கூறினர். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஷ்டிக் சாக்கடைகளை அடைத்து கொண்டு, கொசுக்கள் பெருகி நோய் வர காரணமாகின்றது. பிளாஸ்டிக் கப்பில் டீ வாங்கி குடிப்பது, பார்சல் சாப்பாட்டுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவது போன்றவற்றால், கல்லீரல் பாதிக்கும் அபாயம் உள்ளது என மாணவர்கள் விளக்கினர். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
பாப்பாபட்டி கோயிலுக்கு புறப்பட்டது மாசிப்பெட்டி மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு
-
குப்பை தரம் பிரிக்கும் மையமான கழிப்பறை
-
24 மணி நேர தொடர் நாட்டியாஞ்சலி
-
குன்றத்து கோயில்களில் மகா சிவராத்திரி விழா
-
கோயில் விழாவில் 431வது ஆண்டாக நாடகம்
-
விக்டோரியா எட்வர்ட் மன்ற முறைகேடுகள்; முதல்வர் ஸ்டாலின் தீர்வு காண வலியுறுத்தல்