புகழூர் வாய்க்காலில் ஆகாய தாமரைஅகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
புகழூர் வாய்க்காலில் ஆகாய தாமரைஅகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
கரூர்:புகழூர் வாய்க்காலில், ஆகாய தாமரை செடிகளை அகற்றி துார் வார வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தடுப்பணையில் இருந்து பிரியும் புகழூர் வாய்க்கால் நொய்யல், வேட்டமங்கலம், நாணப்பரப்பு, வேலாயுதம்பாளையம், புஞ்சைத்தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், வாங்கல், நெரூர்வடபாகம் வழியாக சென்று காவிரியில் கலக்கிறது. இந்த வாய்க்கால் மூலம், 35 ஆயிரம் ஏக்கரில் நெல், வாழை, வெற்றிலை, கோரை, மரவள்ளிக்கிழங்கு, தென்னை உள்ளிட்ட சாகுபடிகள் நடக்கிறது. மாவட்டத்தின் முக்கிய வாய்க்கால்களின் ஒன்றாக இருக்கும், இந்த வாய்க்காலில் ஆங்காங்கே ஆகாய தாமரை செடிகள் முளைத்துள்ளது. இந்த வகையான செடி, அதிகளவில் தண்ணீரை இழுத்து ஆவியாக்கும் திறன் கொண்டது. மேலும், பல இடங்களில் குப்பை கழிவுகள் தேங்கியுள்ளது, முட்புதர்கள் மண்டி கிடக்கின்றன. இதனால், வாய்க்காலில் நீரோட்டம் தடைபடுவதால் கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாக சென்று சேர வாய்ப்பில்லை. சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல், விவசாயிகள் அவதியுறுகின்றனர். வாய்க்காலில் உள்ள முள்புதர்கள், ஆகாயத்தாமரைகள் ஆகியவற்றை அகற்றி துார்வாரிட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
குகைக்குள் 'டிரெக்கிங்': ஒடிசா அரசு அறிமுகம்
-
மாணவிக்கு டார்ச்சர் வாலிபர் மீது போக்சோ
-
ரூ.3.50 கோடி செம்மர கட்டைகள் பறிமுதல் ரூ.1 கோடியில் வீடு கட்டிய புரோக்கருக்கு வலை
-
நீலகிரியில் டைப்ரைட்டிங் தேர்வு மையம் டி.என்.பாளையம் மாணவியர் முறையீடு
-
அடுத்த ஆண்டு இ.பி.எஸ்., முதல்வர் அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு
-
மேட்டூர் நீர்வரத்து திடீரென அதிகரிப்பு