அமராவதி அணையில்தண்ணீர் திறப்பு நிறுத்தம்
அமராவதி அணையில்தண்ணீர் திறப்பு நிறுத்தம்
கரூர்:அமராவதி அணையில் இருந்து, தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, கரூர் மாவட்ட சம்பா சாகுபடி பணிக்காக, கடந்த மூன்று மாதங்களாக முறைவைத்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றின் விவசாய பகுதிகளான அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை மற்றும் கரூர் வட்டார பகுதிகளில், சம்பா சாகுபடி நெல் அறுவடை தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால், அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட, தண்ணீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 57.75 அடியாக இருந்தது. அமராவதி அணைக்கு நேற்று காலை வினாடிக்கு, 37 கன அடி தண்ணீர் வந்தது.
* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 97 கன அடியாக தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக, திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது
* கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. இதனால், நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 7 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 14.95 அடியாக இருந்தது.
மேலும்
-
பாப்பாபட்டி கோயிலுக்கு புறப்பட்டது மாசிப்பெட்டி மகா சிவராத்திரி வழிபாட்டுக்கு
-
குப்பை தரம் பிரிக்கும் மையமான கழிப்பறை
-
24 மணி நேர தொடர் நாட்டியாஞ்சலி
-
குன்றத்து கோயில்களில் மகா சிவராத்திரி விழா
-
கோயில் விழாவில் 431வது ஆண்டாக நாடகம்
-
விக்டோரியா எட்வர்ட் மன்ற முறைகேடுகள்; முதல்வர் ஸ்டாலின் தீர்வு காண வலியுறுத்தல்